வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் செயலகங்களின் செயலாளர்கள் பலருக்கு இடமாற்றம்!

வடமாகாண அமைச்சுக்கள், மற்றும் செயலகங்களின் செயலாளர்கள் 4 பேருக்கு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, பேரவை செயலகம், உள்ளுராட்சி அமைச்சு, மற்றும் ஆளுநர் செயலகம் ஆகியவற்றின் செயலாளர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றத்தின் பிரகாரம் கல்வியமைச்சின் செயலாளார் உள்ளுராட்சி அமைச்சுக்கும், சுகாதார அமைச்சின் செயலாளர் பேரவை செயலகத்திற்கும்,  பேரவை செயலகத்தின் செயலாளர் பிரதி பிரதம செயலாளர் நிர்வாகத்திற்கும், உள்ளுராட்சி அமைச்சின் செயலர் கல்வி அமைச்சுக்கும்,  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக வரதீஸ்வரனும், சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக திருமதி சரஸ்வதி மேகநாதனும்,  உள்ளுராட்சி அமைச்சின் புதிய செயலாளராக இளங்கோவனும், பேரவை செயலகத்தின் புதிய செயலாளராக செந்தில் நந்தனனும், நியமனம் செய்யப்பட்டுள்ள போதும் ஆளுநர் செயலகத்திற்கு புதிய செயலாளர் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews