வடமேல் மாகாணத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காய்வாளரின் வீட்டுக்கு சென்ற குழு அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில் வாரியப்பொல பிரதேசத்தில் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன்,
கொலன்னாவையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அழகுக்கலை நிபுணர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைதான சந்தேகநபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (18) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,
அவர்களை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.