பல இடங்களில் இடியுடன் மழை

மேல், தென், சப்ரகமுவ மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

திருகோணமலையில் துப்பாக்கி ரவைகள் மீட்பு..!!

திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் நேற்று   (23) பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன. வயல் உரிமையாளர்களினால் மொரவெவ பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.   வயல் உரிமையாளர்களினால் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது... Read more »

தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் பொங்குவதற்கு தடை

தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவடி கிராமத்தில் உள்ள மிகப்பழமையான கந்தசாமிமலை முருகன் ஆலயத்தில் மாதாந்தம் கிராம மக்களால்... Read more »

வெற்றிலைக்கேணியில் விபத்து-செய்தி  சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இன்று 23.02.2024 இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதோடு இதனை செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார். வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார்... Read more »

யாழ்ப்பாண இந்தியத்துணைத்தூதரக புதிய கொன்சியூலராக சாய் முரளி நியமனம்!

யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலராக சாய் முரளி அடுத்தவாரம் முதல் பதவியேற்கவுள் ளார் . கொன்சியூல் ஜெனரல் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், அவர் புதுடில்லிக்கு மாற்றலாகிச் செல்கின்றார். இந்த நிலையிலேயே அந்த இடத்துக்கு சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more »

நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறை: பேராயரும் மீனவர்களும் முரண்படுவது ஏன்?

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் நீர்கொழும்பில் உள்ள மீன்பிடி இறங்குதுறையின் உரிமம் தொடர்பில் மீனவர் சங்கத்திற்கும் இலங்கை கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. நீர்கொழும்பு – பிட்டிபன இறங்குதுறையின் நிர்வாகத்தை தங்களுக்கு வழங்குமாறு கோரி கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்திற்கு... Read more »

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் கால் கோள் விழா

தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வானது யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இன்று 22/02/2024 காலை 9மணியளவில் வெகு சிறப்பாக ஆரம்பம் ஆனது. இன் நிகழ்வின் தலைமையக கல்லூரியின் அதிபர் ஜானப் என்எம் ஷாபி பிரதம விருந்தினராக Mr ஜகத் விஷந்த senior superintendent of... Read more »

வெற்றிலைக்கேணியில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம்-30இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை கொண்டு சென்றனர்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று 22.02.2024 பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெற்றிலைக்கேணியில் இருந்து நேற்று (22)மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகள் தங்களது... Read more »

பிரான்சின் அடையாளமாக கருதப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரம் மீண்டும் மூடப்பட்டுள்ளது

பிரான்சின் அடையாளமாக கருதப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரம் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈபிள் கோபுரத்தின் ஊழியர்கள் நினைவுச்சின்னத்தை நிதி ரீதியாக நிர்வகிக்கும் விதத்தை எதிர்த்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அதிகாரிகள் அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஈபிள்... Read more »

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டிய முக்கிய நிகழ்வு!

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டி, இலக்கியம், திரைப்படம், நடன ஆற்றுகை என்பவற்றினை உள்ளடக்கிய‌ ஒரு நாள் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) அன்று யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது. மலையகத் தமிழ் மக்களின் வாழ்வியல், அனுபவங்கள், இலட்சியங்கள், போராட்டங்கள்... Read more »