திருகோணமலையில் துப்பாக்கி ரவைகள் மீட்பு..!!

திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் நேற்று   (23) பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன.

வயல் உரிமையாளர்களினால் மொரவெவ பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

வயல் உரிமையாளர்களினால் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது குறித்த துப்பாக்கி ரவைகளை கண்டதாகவும் உடனடியாக மொரவெவ பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும் வயல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews