வெடுக்குநாறிமலை பூசகர் கைது!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கேஸ்வரரின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆலயத்தில் பூசை... Read more »

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியிலும் உப்பு கஞ்சி….!

இனப் படுகொலை வராத்தை நினைவு கொள்ளும் வகையில் இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியிலும் உப்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் இ.முரளிதரன் தலமையில், முன்னணி உறுப்பினர்கள், பிரதேச பிரதேச மக்கள்... Read more »

ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது – ஜனாதிபதி…!

ஆசியாவின் முதலாவது மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஜனாதிபதி  தலைமையில் நடைபெற்றது.! ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது  என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆசிய... Read more »

மின்னமைப்பினால் உருவாகிய இந்து தெய்வங்கள்

இந்திரவிழா வரலாற்றில் மட்டுமல்ல, இலங்கையிலே இதுவரையில் எந்தவொரு மின்னமைப்பினாலும் கட்டமைக்கப்படாத, இந்து தெய்வங்களின் உருவங்களை மிகவும் பிரமாண்டமாக மின்னலங்காரங்களால் கட்டமைத்து வரலாற்றுச்சாதனை இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை இந்திரவிழாவில் இது இடம்பெற்றது. இந்திரவிழாவிலே அனைத்து மக்களையும் கவர்ந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று இந்திரவிழாவை புதியதொரு பரிணாம வளர்ச்சிக்கு... Read more »

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு…!

மக்கள் பங்களிப்புடன் மன்னார் மாவட்டத்தில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செற்றிட்டம் இன்று காலை 8 மணிக்கு மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகளிற்கு சென்று அரிசி விறகு என்பன திரட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி... Read more »

இலங்கை, சவூதி பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு!

இலங்கை,சவூதி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு இவர் தெரிவாகியுள்ளமை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துமென நம்பப்படுகிறது.   சவூதிஅரேபியாவின் மன்னர் பஹட் பெற்றோலியம் மற்றும் கனியவளப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற இவர், அந்நாட்டுடன் நெருக்கமான உறவிலுள்ளவர். சவூதிஅரேபியாவின் முன்னணி... Read more »

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு…!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று பிற்பகல் 1.30  மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது பொதுமக்களின் பங்களிப்புடன் பெறப்பட்ட அரிசியினை கொண்டு காய்ச்சப்பட்ட நிலையில் உயிர்நீத்த உறவுகளிற்கு ஈகைச்சுடரேற்றி ஒரு நிமிட... Read more »

சந்திக அபேரத்ன வைத்தியசாலையில் வைத்து அதிரடி கைது!

கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேசலவை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழுவினர் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின், பணியாளர்கள் குழுவொன்று வழமையான ஆலோசனைகளுக்கு அமைவாக இன்று இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கிறது. குறித்த குழுவினர் எதிர்வரும் 23ம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடத்தின் பிற்பகுதியின், முதலாவது மீளாய்வு பணிக்கு முன்னதாக, இலங்கையுடனான வழமையான ஆலோசனைகளின்... Read more »

காத்தான்குடியில் ஜஸ்போதை பொருளுடன் 3 பேர் கைது!

காத்தான்குடி பிரதேசத்தில் இரு வெவ்வேறு இடங்களில் 300 மில்லிக்கிராம்  ஜஸ் போதைப் பொருளுடன் 3 பேரை நேற்று புதன்கிழமை (10) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பெரும்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார்... Read more »