
இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கியுடன் கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர்... Read more »

யா/வரணி மத்திய கல்லூரியிலிருந்து மாகாணமட்ட போட்டிகளில் பங்குபற்றி இடங்களைப்பெற்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 17-11-2022 நேற்று கல்லூரி முதல்வர் திரு ஆ.தங்கவேலு தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் திரு சி.பிரபாகரன் நலன்விரும்பியும்... Read more »

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திலுள்ள இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்களினால் நேற்று (17.11.2022) காலை 8.30 மணிக்கு மாணவர்களின் செயற்பாட்டுக்காக கையளிக்கப்பட்டது. கொரியா நாட்டின் நிதியில் கொய்க்கா திட்டத்தினூடாக அமைக்கப்பட்ட புதிய கட்டிடமே நேற்று... Read more »

அதிபரையும் அரசாங்கத்தையும் எதிர்க்கும் வகையில் நாளை மாநாடொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உத்தர லங்கா கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் நாட்டின் நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கான தலைமைத்துவம்... Read more »

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் செய்தி குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த செய்திக் குறிப்பில்,“தமிழர் தரப்புக்களுக்கு... Read more »

யாழ்ப்பாணம் நெல்லியடியில் போதைப்பொருளுடன் வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் மோப்பநாய் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கரணவாய், தும்பளை,குடவத்தை பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடம்... Read more »