கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம்: பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த நால்வர் கைது!

பொலன்னறுவை – வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 2 இராணுவ வீரர்களும், விமானப் படையைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட... Read more »

மே 09 வன்முறைச் சம்பம்: 3056 பேர் கைது!

மே மாதம் 9 ஆம் திகதி நாடாளாவிய ரீதியாக ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற 857 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 56... Read more »

IMF இன் எதிர்கால நடைமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர்... Read more »

நாட்டில் அத்தியவசிய மருந்துகள், தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு!

10 வகையான அத்தியவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் இருப்பு ஒரு வாரத்துக்கு மாத்திரமே போதுமானவையாக உள்ளன. சகல வைத்தியசாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வரும் விலங்குகள் கடித்தால் போடப்படும் விலங்கு விசர்நோய் தடுப்பு மருந்தும் போதியளவில் இல்லை என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள... Read more »

கறுவா, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. அதன் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை 3 ஆயிரத்து 900... Read more »

திருக்கேதீச்சர ஆலய எண்ணெய் காப்பு சாத்துதல்இன்று ஆரம்பமாகி எதிர்வரும் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது!

திருக்கேதீச்சர பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாத்துதல் இன்று காலை முதல் ஆரம்பமாகி எதிர்வரும் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளதாக மன்னர் திரு கேஸ்வர் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்கள் இந்து கலாச்சார முறைப்படி வருகை தந்து எண்ணெய் காப்பு சாத்துதலில் கலந்து... Read more »

வடக்கு சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணி- வடக்கு வைத்தியர் அணியினருக்குமிடையிலான துடுப்பாட்டத்தில் சட்டத்தரணிகள் அணி வெற்றி.

வடமாகாண சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணியினருக்கும் வடமாகாண வைத்தியர் கிரிக்கெட் அணியினருக்குமிடையிலான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் சட்டத்தரணிகள் அணி அபார வெற்றி பெற்றது. சட்டத்தரணிகள் அணிக்கு நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் அவர்களும்,வைத்தியர் அணிக்கு புற்றுநோய் சத்திரசிசிச்சை நிபுணர் கணேசமூர்த்தி சிறிதரன் அவர்களும் தலைமை தாங்கினர். யாழ்ப்பாணம்... Read more »

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் கைதான 10 பேருக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு – முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் கைதான 10 பேர், மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது குறித்த பத்து பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். முள்ளியவளை பிரதேசத்தில்... Read more »

கொழும்பில் பிரபல மருத்துவமனையில் பணிக்குழாமினரின் வருகையில் வீழ்ச்சி.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து போதிய பொது போக்குவரத்து இன்மையால், கொழும்பு சிமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிக்குழாமினரின் வருகை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்றில் ஒருவர் நாளாந்தம் சேவைக்கு சமூகமளிப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு சிமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 2,600 பணிக்குழாமினர் உள்ளதாக... Read more »

தனியார் மருந்தகங்களுக்கு மருந்துகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் முழுமையாக பாதிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்களுக்கு மருந்துகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கன்கந்த தெரிவித்துள்ளார். இதற்கு முன்னுரிமையளிப்பதற்கு அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »