கிளிநொச்சி,முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் உள்ள அனைவரது மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு வருகிறது என கிளிநொச்சி முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்களது மின் கட்டணம் 4000 ரூபாவுக்கு... Read more »
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் நேற்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி... Read more »
தந்தை அழைத்து சென்ற மகளை காணவில்லை எனவும், 2 மாதங்களாக தேடியும் கிடைக்காத நிலையில் பொதுமக்களிடம் தாயார் உதவி கோரியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த 9 வயதுடைய துஸ்யந்தன் பியூமிகா என்ற சிறுமியையே அவரது தந்தை அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில்... Read more »
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்டிருந்த அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானியை இரத்துச் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிட்டுள்ளார். சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அதிபரால் விசேட வர்த்தமானி கடந்த... Read more »
யாழ். மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 டெங்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக... Read more »
ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினின் வெட்கம்கெட்ட நில அபகரிப்பு செயல்களால் உக்ரைனுக்கு அளித்துவரும் நிபந்தனையற்ற ஆதரவை நேட்டோ கைவிடாது என மேற்கத்திய இராணுவக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் Jens Stoltenberg கடும் கோபம் வெளியிட்டுள்ளார். இதேவேளை உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தமது நாட்டுடன் இணைத்துக்கொண்டு விளாடிமிர்... Read more »
கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாடசாலை அதிகாரிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலைகளில் முறைசாரா வகையில்... Read more »
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடலியடைப்பு பகுதியில் இம்மாதம் இரண்டு வீடுகள் உடைத்து திருடியமை மற்றும் ஒரு கடை உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (30.09.2022) பதிவாகியுள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்படும்... Read more »
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (01.10.2022) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. “தமிழ் குழந்தைகள்... Read more »
உலகில் பல பிரதான நாணயங்களின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கைக்கும் பாதகமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத்தை தவிர ஏனைய பல நாடுகளின் பொருளாதாரம் ஆபத்தான நிலைமைக்கு உள்ளாகி உள்ளது... Read more »