கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்! மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாடசாலை அதிகாரிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் முறைசாரா வகையில் நிதி அறவிடுவதை தடைசெய்து 2015/5 சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் பெற்றோர்கள் இருக்கும் நிலையில், தேவையற்ற சுமைகளை அவர்கள் மீது சுமத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவர் குறிப்பாக அதிபர்கள் இவற்றை செயற்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

அந்த வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Deni