தானாக இயங்கி விபத்துக்குள்ளாகிய உழவு இயந்திரம் – சாரதி படுகாயம்

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்று (06) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,... Read more »

இலங்கையில் 55 அரச அலுவலகங்களை மூட அரசாங்கம் முடிவு

இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அரச அலுவலகங்களை மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்... Read more »

MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்து…!

MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில், MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. சேருவில பகுதியில் பயணித்திருந்த வேளை எதிரே வந்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more »

துருக்கியில் அனர்த்தம்: துருக்கிக்கான இலங்கை தூதுவர் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அல்லது துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல்களை சமர்ப்பிக்க முடியும் என துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க... Read more »

தலங்கமவில் வர்த்தகர் கொலை: சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம்

கொழும்பு பத்தரமுதல்ல – தலங்கம பிரதேசத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே தொழிலதிபரை கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம்... Read more »

13வது திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய பௌத்த பிக்குகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் உள்ள சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம்மேற்கொண்டுள்ளது, மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள்உள்ளடக்கிய 20 பௌத்த துறவிகள் அடங்கிய குழு  யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு... Read more »

பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

சொகுசு பேருந்து மோதியதில் வயோதிப பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று பிலியந்தலை – மிரிஸ்வத்த சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார். பூப்பறிப்பதற்காக வீட்டிலிருந்த... Read more »

இலங்கையில் வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் -500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதாக தேசிய மக்கள் படையின் பொதுச் செயலாளர் டொக்டர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்வைக்கும் நியாயமற்ற மற்றும் தன்னிச்சையான வரி விதிப்பினால் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி... Read more »

பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் ஆபத்தில் இலங்கை விமான சேவை

விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக பதவி விலகுவதால் இலங்கை எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு 138 விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்பட்ட போதிலும் தற்போது 81 அதிகாரிகள் மாத்திரமே சேவையில் இருப்பதாக அந்த... Read more »

மின் கட்டண அதிகரிப்பு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான தீர்ப்பு இம்மாதம் 13ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு... Read more »