கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பம்

கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பமானது. பங்குனி உத்திர பொங்கல் விழா விளக்கு வைப்புடன் இன்று இனிதே ஆரம்பமானது. விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்று பிரம்பு வழங்கும் வைபவமும் நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து பாரம்பரிய முறையில் மாட்டு... Read more »

பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் – இ.போ.ச நடவடிக்கை

பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்றமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் உள்ளதாவது, “ பேரூந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் ”... Read more »

கிராஞ்சி இலவன் குடாவில் 82 சட்டவிரோத கடலட்டை உள்ள நிலையில் மேலும் பண்ணைகளுக்கு அனுமதி……!

கடலட்டை பண்ணைக்காக பாரம்பரிய தொழில்களை அகற்றி  ஏழை மக்களை வதைக்கும் செயற்பாட்டில் கிளிநொச்சி  கடற்றொழில் நீரியல் வளத்துறை  உதவிப்பணிப்பாளர் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இது  தொடர்பில்  நீதி கேட்ட அப்பாவி மீனவர்களை  இன்றைய தினம் பொலிசாரை கொண்டு மிரட்டி  வழக்கு... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி! கிராமத்துக்குச் செல்லும் நாடாளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு அதிருப்தி உள்ளதால் நாடாளுமன்றத்தை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவுள்ளார். மக்களின் காலடிக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது மற்றும் அவர்களின் யோசனைகளை உள்வாங்கிச் செயற்படுத்துவதுமே இதன் நோக்கம்... Read more »

யாழ். திருநெல்வேலியில் கவனயீர்ப்பு

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் சைவச் சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதி, மாணவர்களினால் சேதமாக்கப்பட்டமையை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் பழைய மாணவர்களினால், இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள சைவச் சிறுவர் இல்லமானது நீண்ட காலமாக சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.... Read more »

எரிபொருள் விலை திருத்தம்: பேருந்து கட்டணம் குறைப்பு!

எரிபொருள் விலைத் திருத்தத்தையடுத்து, பேருந்து கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளை மறுதினம் முதல் 30 ரூபாவாக குறைக்குமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு, போக்குவரத்து அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். குறைக்கப்படவுள்ள ஏனைய பேருந்து கட்டணங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படுமெனவும்... Read more »

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அவர்களது ஊடக அறிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை பின்பற்றாமல் அதிபர்கள் எதேச்சையாக பாடசாலை விடுகைப்பத்திரங்களை வழங்குவது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்துக்குட்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன்... Read more »

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையையடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தொல்லியல் திணைக்களம்,  கடற்படை ஆகியவற்றினரின்... Read more »

எழுவைதீவின் பெருவளமாக உள்ள பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், கருவேலை மரங்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

எழுவைதீவின் பெருவளமாக உள்ள பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், கருவேலை மரங்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுவைதீவு மக்களிடம் தெரிவித்துள்ளார். எழுவைதீவு மக்களும், கடற்றொழிலாளர்களும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (28)  எழுவைதீவில் நடைபெற்றுள்ளது.... Read more »

வெலிகந்தை செவணப்பிட்டியில் வான் கனரகவாகனம் மோதிய விபத்தில் திருக்கோலில் தம்பட்டையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம் -சாரதி கைது !!

மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதானவீதி செவணப்பிட்டி பகுதியில் கனரகவாகனம் வான் ஒன்றும் இன்று புதன்கிழமை (29) நேருக்கு நோமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கனரகவாகன சாரதி கைது செய்துள்ளதாக  வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர். தம்பட்டை பிரதானவீதி திருக்கோவிலைச்... Read more »