கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பம்

கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பமானது.
பங்குனி உத்திர பொங்கல் விழா விளக்கு வைப்புடன் இன்று இனிதே ஆரம்பமானது. விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்று பிரம்பு வழங்கும் வைபவமும் நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து பாரம்பரிய முறையில் மாட்டு வண்டில்களில் பிரம்பு ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. பின் 30/03/2023 வியாழக்கிழமை அதிகாலை 05.00மணியளவில் மீசாலை புத்தூர் சந்தி பண்டமரவடியைச் சென்றடைந்து விசேட பூசைகளும் நடைபெறும்.
மீண்டும் 04/04/2023 அன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் மடைப்பண்டம் புறப்பட்டு 05/04/2023 புதன்கிழமை மாலை 06.00மணியளவில் ஆலயத்தை வந்தடையும்.மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 22ம் நாள் உத்தர நட்சத்திரம் (பி.ப.12.04வரை) கூடிய சுபவேளையில்05/04/2023புதன் கிழமை பகல் இரவு பொங்கல் நிகழ்வுகள் நடைபெறும் என கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 

Recommended For You

About the Author: Editor Elukainews