யாழ். கருவாட்டுகடைகளில் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி பரிசோதனை!

இன்றையதினம் (12.04.2023) புதன்கிழமை யாழ். நகர் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கருவாட்டுகடைகள், யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் யாழ்.... Read more »

தீயாக தீபம் அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 25ஆம் நினைவேந்தல்

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 25ஆம் நாள் நினைவேந்தல் இன்று (12.04.2023) புதன்கிழமை, பல்கலை... Read more »

யாழில் புத்தாண்டு கொண்டாட்ட ஆடை கொள்வனவில் மக்கள்!

14.04.2023 அன்று பிறக்கவிருக்கும் தமிழ், சிங்கள  புது வருடப்பிறப்பினை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் மக்கள் புத்தாடைக் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க முடிக்கின்றது. யாழ். முனீஸ்வரர் பகுதி, நகரப்பகுதி, ஆகிய இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் ஈடுபடுகின்றனர். இந்த வருஷம் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் பொருட்களின்... Read more »

சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிவாவினை நடாத்துமாறு கோரி கவனயீர்ப்பு!(video)

சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிவாவினை நடாத்துமாறு கோரி இன்றையதினம் பக்தர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தை முன்னெடுத்த பக்தர்கள் கருத்து தெரிவிக்கையில், தனிப்பட்ட காரணத்துக்காக ஒரு சிலர் இந்த ஆலயத்தின் திருவிழாவினை தடுக்கிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும்... Read more »

அச்சுவேலி போராட்டம் முடிவும் ஆளுநர் அலுவலக உத்தியோகத்தர்கள் சந்திப்பு

அரசாங்கத்திற்கு சொந்தமான கிராமிய சிறு கைத்தொழில் திணைக்களத்தின் மாகாண மத்திய அரசிற்கு உரித்தான கட்டடத்தில் மத ஆராதனைகளில் ஈடுபட்டுவந்த போதகர் ஒருவருக்கு எதிராக இன்று அச்சுவேலியில் போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போதகரின் ஆலயத்தில் மாலை வேளை ஆராதனை இடம்பெற்ற போது ஆலயத்திற்கு கல்லால்... Read more »

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வழமை போன்று இம்முறையும் மாபெரும் விசேட இப்தார் நிகழ்வு இன்று 2023.04.11 ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உயர்திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள்... Read more »

கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் – ஊழியர்கள் வைத்திய சாலையில், உடமைகளுக்கும் சேதம்

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்க 11பேர் அணி தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் 11பேர் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மே தின கூட்டத்தில் பலந்துகொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித்திருப்பதாக அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 14 உறுப்பினர்கள்... Read more »

சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானார்

வவுனியாவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் இன்று அதிகாலை காலமானார். பி.மாணிக்கவாசகம் என அறியப்படும் இவர் பிபிசி உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு செய்தியாளாராக பணிபுரிந்துள்ளார். பல் பரிமாணங்களை கொண்ட இவர் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நூல்கள் என்பவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். யுத்த காலத்தின்... Read more »

திருகோணமலை ஆறு கடற்தொழிலாளர்கள் கைது

திருகோணமலை- சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த ஆறு கடற்தொழிலாளர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனையாவெளி பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த ஆறு பேரையும் நேற்று (11.04.2023) மாலை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனையாவெளியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்கள்... Read more »