அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை –

அரசியல் கைதிகள் அல்லது போர் கைதிகளை அரசு விடுதலை செய்வதன் மூலம் சமூகங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வும், நம்பிக்கையும் ஏற்படும். அதனூடாக ஒன்றுபட்ட இலங்கையர்களாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார். அவரால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு... Read more »

ஊர்காவற்றுறை எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் மருத்துவர்கள் அவமதிப்பு, உரிய நடவடிக்கை இல்லையேல் பணி புறக்கணிப்பு……! மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

ஊர்காவற்றுறை எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் மருத்துவர்கள் தொடர்ந்தும் அவமதிக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த 30/07/2022  அன்று ஊர்க்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையில் இருந்த வைத்தியர் பிரதேச செயலாளரூடாக விசேட அனுமதியை பெற்று... Read more »

காலி முகத்திடல் பகுதிகளில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுமாறு காலக்கெடு! –

கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள, அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் பயிர்களை உடனடியாக அகற்றுமாறு, பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.இது தொடர்பில், எதிர்வரும் 5 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு, கொழும்பு கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன்,... Read more »

இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலர் ஜோசப் ஸ்டாலின் கைது! –

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள, இலங்கை ஆசிரியர் சங்க தலைமை அலுவலகத்தில் இருந்த போதே, கொழும்பு கோட்டை பொலிஸாரால், நேற்று மாலை அவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த மே மாதம் 28 ஆம் திகதி,... Read more »

நீண்டகாலமாக ஒரே பதவி கிழக்கு மாகாண அதிகாரிகள் 6பேருக்கு ஒரே நாளில்  இடமாற்றம்.. ஆளுநர் அதிரடி.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் பணிப்புரைக்கு அமைய மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றிய சில திணைக்களத் தலைவர்கள்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததாலும், அந்த பதவிகள் தொடர்பான தகுதிகளை பூர்த்தி செய்யாததாலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்தில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் தனிப்பட்ட வாகனங்களுக்கு இனிமேல் எரிபொருள் கிடையாது.! மாவட்டச் செயலர்

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்புவதெனவும், தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதில்லை எனவும் அவ்வாறு வழங்குவதாக இருந்தால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெறப்படவேணடும் என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை மாவட்ட... Read more »

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் இரு தரப்பினரிடையே பரஸ்பரம் மோதல்! பலர் காயம், வீடுகள் சேதம்.. |

யாழ்பாணம் – அராலி வீதியில் உள்ள வசந்தபுரம் – நித்தியவொளி கிராமங்களை சேர்ந்த சிலரிடையே உருவான முரண்பாடு மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இரு தரப்பும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுவதுடன், வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் 1ம் திகதி மாலை... Read more »

அரச ஊழியர்களின் வெள்ளிக்கிழமை விடுமுறை இரத்து…..!

அரச ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்திருக்கின்றது. வெள்ளிக் கிழமைகளில் விடுமுறை வழங்கி  வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டிருக்கின்றது. Read more »

வெளிநாட்டிலிருந்து சட்டரீதியாக இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி..!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சட்டபூர்வமாக பணம் அனுப்பும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் தொடர்ந்தும் சட்டபூர்வமாக பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையிலான இரண்டு முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை நேற்று அனுமதி அளித்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு முன்மொழிவில் சட்டப்பூர்வ... Read more »

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டணை அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார்களே தவிர இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள்! வடமாகாண ஆளுநர்.

வடமாகாணசபையின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீதான ஒழுக்காற்று விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டணை அல்லது பதவி நீக்கமே செய்யப்படும். இடமாற்றம் வழங்கப்படாது. என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »