மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு!

மலையக பிரதேசங்களில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மலையக பகுதிகளில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. கண்டி... Read more »

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழுமி நிற்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பணிப்பு!

வாகனங்களை வரிசையில் விட்டுவிட்டு, எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் அதிகளவானோர் நிற்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மாவட்ட செயலரின் தலைமையில்... Read more »

இரு வீடுகள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி: 17 பேர் இடப்பெயர்வு.

நுவரெலியா மாவட்டம் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெப்லோ பிரதேசத்தில் இரு வீடுகள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். டெப்லோ ஜனபதய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த மண்சரிவு காரணமாக 8 குடும்பங்களை சேர்ந்த 17... Read more »

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது.

கொழும்பு கொள்ளுப்பிட்டியவிலுள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைத்து சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மடபாத்த, கொழும்பு 5 ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 18, 22 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு... Read more »

சந்தர்ப்பவாத அரசியல் வேண்டாம்…….!சஜித் பிரேமதாசா.

தற்சமயம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம் பெற்றாலும், அரசியல் தலைகள் பரிமாற்றம் சம்பந்தப்பட்டவை, அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்ளும் அரசியல் சூதே இத்தகைய பல கலந்துரையாடல்களில் காணக்கிடைப்பதாகவும், இந்நேரத்தில், தன்னைப் பற்றி சிந்திப்பதை விட நாட்டைப் பற்றி... Read more »

போராட்டக்காரர்களுக்கு நட்சத்திரக் ஹோட்டலில் இருந்து தினமும் உணவு?: பொலிஸார்

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து அதன் செயற்பாட்டாளர்களுக்கு உணவு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த ஹோட்டலில் இருந்து நாளொன்றுக்கு 500 முதல் 600 உணவுப் பொதிகளை போராட்டக்காரர்கள் பெற்றுள்ளதாகவும் போராட்டம் தொடங்கியதில் இருந்து... Read more »

நல்லூர் கந்தன் கொடியேற்றம் (படங்கள் இணைப்பு)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. காலை 9 மணி முதல் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி, காலை 10.00 மணிக்கு... Read more »

நாதன் அறக்கட்டளை நிறுவனத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து பொருட்கள் அன்பளிப்பு!

எஸ் கே நாதன் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களினால் யாழ்ப்பாண போதனை வைத்தியசாலைக்கு தேவையான பல லட்சம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்கள் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. Read more »

கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்யுமாறு வலியுறுத்தும் கனேடிய எம்.பி.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைதுசெய்யப்படவேண்டும் என கனேடிய பழமைவாதக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியேர் பொய்லியேவ்ர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடொன்று... Read more »

வவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண் ஒருவர் காயம்!

வவுனியா ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா கல்மடுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே காயமடைந்தவராவர். குறித்த பெண் தமது வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போதே,... Read more »