ஏர் நிலம் அமைப்பினர் சிறப்புடன் நடாத்திய விவசாயிகள் கெளரவிப்புடனான பொங்கல் விழா!

ஏர் நிலம் அமைப்பினர்  நடாத்திய விவசாயிகள் கெளரவிப்புடனான பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தருமபுரம் நெத்தலியாறு முத்து விநாயகர்  ஆலய முன்றலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் தருமபுரம் பகுதியில் வசிக்கும் மூத்த விவசாயிகளுக்கான கெளரவிப்பு... Read more »

கரைச்சி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சி பொது நூலக அடிக்கல் நாட்டு விழா !

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தகாலத்தில் அழிவுற்ற  பொது நூலகம் புதிதாக  கரைச்சி பிரதேச சபையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய பதில் துணை தூதுவர் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை முதல்வர்கள், கரைச்சி பிரதேச... Read more »

விவசாய பெண்கள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்….!

பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றம் நெல் சந்தைப்படுத்தலை மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணி கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி டிப்புா சந்தியில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெண்கள் ஏ9 வீதி ஊடாக... Read more »

விவசாய அமைச்சு வேண்டுமென்றே பாகிஸ்தானில் இருந்து பீற்றூட் இறக்குமதி!  எம்.ஏ.சுமந்திரன்…..!

விவசாய அமைச்சு வேண்டுமென்றே பாகிஸ்தானில் இருந்து பீற்றூட்டை  இறக்குமதி செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்க்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது... Read more »

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவதில்லை……! பா.உ சி.சிறிதரன்!

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவதில்லை. தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது,  என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் . அவர் மேலும் தெரிவித்ததாவது. கிளிநொசி விநாயகபுரம் கிராமத்தில் கடந்த  ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண... Read more »

தமிழர்களின் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டிய கட்டமிது….!பா.உ.சி.சிறிதரன்!

உலகப் பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து கட்டுமானங்களையும் இழந்து வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து  நிற்கின்ற தழிழர்களின் வாழ்வை கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள்  நாங்கள் நிற்கின்றோம்  என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பராளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் .  முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள போரினல் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வை... Read more »

பளையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் நபர் ஒருவர் சட்டவிரோத  இடியன்  நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்தாக பளை பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பளை போலீசாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று (17)இரவு  குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது சந்தேக நபரிடம்... Read more »

ஒமிக்ரோன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் அக்கறை இல்லை! சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சாடல்.. |

நாட்டில் ஒமிக்ரோன் திரிபு மிகவும் ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக மாறியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அக்கறை இல்லை என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். பொது மக்கள் சுகாதார... Read more »

நாட்டில் தினசரி 4 மணிநேரம் மின்வெட்டு..! மக்களை தயாராகுமாறு எச்சரிக்கும் இ.மி.சபை தொழிற்சங்கம்.. |

நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளது போன்றவற்றினால் தினசரி 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்படலாம் எனவும் மக்கள் அதற்குத் தயாராக வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு எதிர்வு கூறியுள்ளார். விடயம்... Read more »

விடுதலை புலிகள் தமிழை காதலித்ததால் அவர்கள் காலத்தில் வெகு விமர்சையான முத்தமிழ் விழாக்களை யாழ்.மண்ணில் நடத்தினோம்.. |

தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனர் அதனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்கள் வெகு விமர்சையாக நடந்தன, நடத்தினோம். என கம்பவாரிதி இ.ஜெயராஜ் கூறியுள்ளார்.  யாழ்.மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் நல்லுார் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டு ஆரம்ப உரையாற்றும்போதே... Read more »