நாட்டில் தினசரி 4 மணிநேரம் மின்வெட்டு..! மக்களை தயாராகுமாறு எச்சரிக்கும் இ.மி.சபை தொழிற்சங்கம்.. |

நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளது போன்றவற்றினால் தினசரி 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்படலாம் எனவும் மக்கள் அதற்குத் தயாராக வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு எதிர்வு கூறியுள்ளார்.

விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து  வெளியிடுகையில்,

சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபை வசம் காணப்படுகின்றது.

அத்துடன், 22 நாட்களுக்கு மாத்திரம் தேவையான உராய்வு எண்ணெய், மின்சார சபையின் களஞ்சியசாலையில் உள்ளது.

இதன்படி, மூன்று நாட்களின் பின்னர் இலங்கை மின்சார சபைக்கு, மின் வெட்டை நடைமுறைப்படுத்தி மின்சார கேள்வியை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதனை முன்னெடுக்கவில்லை என்றால், மின்சார கட்டமைப்பின் சமநிலைமையை தொடர்ந்தும் பேண முடியாது.

நீர் மின் உற்பத்தி நடவடிக்கையின் போது, விவசாயம், குடிநீர் மற்றும் சூழல் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, நீர் முகாமைத்துவம் செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும்,

அதனால் நீர் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் புதிய மின் உற்பத்தி திட்டங்களை ரத்து செய்தல் ஆகிய காரணங்களினால்,

மின் வெட்டு நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்களில், மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மாற்று மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டிற்குள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews