ஒமிக்ரோன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் அக்கறை இல்லை! சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சாடல்.. |

நாட்டில் ஒமிக்ரோன் திரிபு மிகவும் ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக மாறியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அக்கறை இல்லை என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை புறக்கணிப்பதனால் நிலைமை மோசமடைந் துள்ளதாகவும்,  தொற்றுநோய் கடந்து விட்டது என்ற அனுமானத்தின் கீழ் பூஸ்டர் டோஸினை பெறுவதற்கான உத்தரவுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகளினால் உறுதிபடுத்தப்பட்டதை விட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும்,

ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் செல்வதாக அவர் ஏச்சரித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews