விவசாய பெண்கள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்….!

பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றம் நெல் சந்தைப்படுத்தலை மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணி கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி டிப்புா சந்தியில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெண்கள் ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி மாவட்ட செலகம் வரை சென்று அங்கு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் மகஜர் வாசிக்கப்பட்டு அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை இடம்பெற்ற வரும் நிலையில் குறித்த நெல்லினை வெளி மாவட்டங்களிற்கு சந்தைப்படுத்தாது, மாவட்டத்திற்கு உள்ளேயே சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இதன்புாது பேரணியில் ஈடுபட்டவர்களால் வலியுறுத்தப்பட்டது.
நாட்டில் தற்பொழுது உள்ள பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், அதற்கு ஏற்ற வகையில் அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது பேரணியில் ஈடுபட்டவ்ரகளால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews