பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளெழ சர்வதேச, பிராந்திய ஒத்துழைப்பு தேவை – ஜனாதிபதி!

உலக நெருக்கடியினால் வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தையும், மக்களையும் மேம்படுத்துவதற்கு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு அவசியம்… • சவால்கள் இருந்தபோதிலும், பிம்ஸ்டெக் நாடுகளின் எதிர்காலம் தெளிவாக உள்ளது. • கடல் பிராந்திய மற்றும் நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க கடல்சார் நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் … •... Read more »

சர்வதேச கபடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கௌரவிப்பு!

பங்களாதேசில் இடம்பெற்ற பங்க பந்து கிண்ண சர்வதேச கபடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இலங்கை ஆண்கள் கபடி அணியில் முண்ணனி வீரராக திகழ்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர் ராசோ பென்சி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இடம்பெற்றது... Read more »

இந்திய அரசினால் மீனவருக்கென வழங்கப்பட்ட உணவு பொதி மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை! சம்மேளனம் குற்றஞ்சாட்டு.

யாழில் இந்திய அரசாங்கத்தினால் மீனவர்களுக்கென வழங்கப்பட்ட உணவு பொதிகள் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்படாமையினால் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை என மீனவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர் யாழ் மாவட்ட  கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தினரிடம்   இந்திய உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட மை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்தனர்... Read more »

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கீரிமலையில் இளம் பெண்ணொருவர் உயிரிழப்பு!

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கீரிமலை கூவில் பகுதியை சேர்ந்தவரும் , கெப்பற்றிக்கொலாவ குடும்பநல உத்தியோகஸ்தருமான கந்தசாமி நிதர்சினி (வயது 27) என்பவரே... Read more »

கோப்பாயில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஐவர் கைது!

நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால்... Read more »

75 வீத நன்கொடைக்காக வடக்கு தீவுகள் இந்தியாவுக்கு – அமைச்சர் டக்ளஸ்!

இந்தியா வழங்கும் 75 வீத நன்கொடைக்காக வடக்கின் மூன்று தீவுகள் வழங்கப்படவுள்ளன என்று கடற்றொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கான முன்னாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். இதன்போது,... Read more »

மின்பிறப்பாக்கி பழுது இருளில் மூழ்கியது சாவகச்சேரி வைத்தியசாலை!

மின்வெட்டு நேரம் ஆதார வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட மின்பிறப்பாக்கி பழுதடைந்தமையால் வைத்தியசாலை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நாட்டில் நேர அட்டவணையின் பிரகாரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இவ்வாறான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின் துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த... Read more »

ஏப்ரல் 7இல் நாடு முழுவதும் 150 போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சி முடிவு!

அரசாங்கத்துக்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 7 ஆம் திகதி தேர்தல் தொகுதிகள் வாரியாக குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஐக்கிய மக்கள்... Read more »

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரும்  பிரேரணைகள் பருத்தித்துறை பிரதேச சபையில் நிறைவேற்றம்….!

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமாரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரும் பிரேரணை பருத்தித்துறை பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத தடை சட்டம் தமிழ் மக்களை மட்டுமல்ல அனைவரையும் பாதிக்கின்ற ஒரு மோசமான சட்டமாகும். இந்த சட்டத்தை நீக்குமாறு கோரிய... Read more »

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து எந்தவித குற்றச்சாட்டுக்களையும் சுமத்தாதவர்களை விடுதலை செய்யுமாறு கோரும் பிரேரணை சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றம்….!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் பலர் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்கள். அவர்களை உரிய தரப்பினர் பிணையிலோ, அல்லது விடுதலை செய்யுமாறு கோரும் பிரேரணையை சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் நேற்று முன்தினம்  சமர்ப்பித்துள்ள நிலையில் குறித்த... Read more »