ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் நியமனம்…!

யாழ்.மாவட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க சில தினங்களுக்கு... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர  விபத்து சிகிச்சை பிரிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைப்பு…!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திஇஈர  விபத்து சிகிச்சை பிரிவு இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அரசின் இலகு கடன் திட்டத்தின் கீழ் நான்கு பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட குறித்த தீவிர விபத்து சிகிச்சை பிரிவே... Read more »

வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 278 ஏக்கர்  மக்களின் காணிகள்  இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  விடுவிக்கப்பட்டுள்ளது. ஜே- 244 வயாவிளான் கிழக்கு,  ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு  ஆகிய... Read more »

கடற்றொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்ட யாழ்.இந்தியத் துணைத்தூதரகம்…!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி  நுழைந்து  இழுவை மடி தொழிலை மேற்கொள்ளும் இந்திய மீனவர்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்று(22) காலை  முற்றுகையிட்டுள்ளனர். மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை(19)   முதல் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டத்தினை... Read more »

வடக்கு-கிழக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள்- மனோ எம்.பி திடீர் சந்திப்பு…!

வடக்கு – கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு இன்றைய தினம்(22)  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கொழும்பிலுள்ள மனோ கணேசனின் இல்லத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், மக்கள் மனு குழுவின் சார்பில் இணைப்பாளர் ஏ.ஜதீந்திராஇ... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது எமக்கு தெரியும்..! – மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  கண்டியில் இதனைக் தெரிவித்தார் இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் எங்கு... Read more »

இந்திய சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள்…!

படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்திய கடற்பரப்பில் கரையொதுங்கிய இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வருடம் தலைமன்னார் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற தலைமன்னார் கிராமம் பகுதியை சேர்ந்த இரு... Read more »

கோப் குழுவிலிருந்து பதவி விலகப் போவதில்லை! ரோஹித்த

கோப் குழுவின் தலைமைப் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் அண்மையில் கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தனவை நியமித்தது. இந்த நியமனத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு குழுவின் உறுப்பினர்கள் பலர் பதவி விலகியுள்ளனர். இவ்வாறான ஓர் பின்னணியிலும்... Read more »

கனடாவை சென்றடைந்த அநுரவிற்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு…!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம்(21) கனடாவுக்கு விஜயம் செய்தார். நாளை மற்றும் நாளைமறுதினம் (23, 24)  கனடாவின் ரொறொன்ரோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அநுர கனடா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவிற்கு... Read more »

சிவராத்திரியை பகலில் நடத்துமாறு கூறும் பொலிஸ்; பொசன் பண்டிகையை பகலில் கொண்டாட முடியுமா? – சார்ள்ஸ் எம்.பி.

இந்துக்களின் சிவராத்திரியை பகலில் நடத்துமாறு பொலிஸார்  கூறுவதை போன்று பௌத்தர்களின் பொசன் தின நிகழ்வை பகலில் நடத்துமாறு பொலிஸாரினால் கூற முடியுமா என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில்  நேற்று   உரையாற்றும் போது மேற்கண்டவாறு அவர்... Read more »