156 வது பொலீஸ் தினத்தை முன்னிட்டு நெல்லியடியில் 9 ஓயவு பெற்ற லொலீஸ் உத்தியோகஸ்தர்கள் கௌரவிப்பு…..!

இலங்கை போலீசின் 156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நெல்லியடி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் உதஸதியோகத்ர்கள்  9 பேர் நேற்றைய தினம் காலை 10:30 மணியளவில் நெல்லியடி பொலிஸாரால்  கௌரவிக்கப்பட்டுள்ளனர்.  நீண்ட காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சேவையாற்றி ஓய்வு... Read more »

ரணிலின் பாரிய திட்டம் வெளிவந்தது -பலருக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்

பாரியதொரு அமைச்சரவை பட்டாளத்தை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எஞ்சியுள்ள அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள 18 அமைச்சரவை அமைச்சர்களுடன் 40 பேர் கொண்ட... Read more »

சுற்றுலா பயணிகளின் வருகையில் திடீர் வீழ்ச்சி!

கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஓகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிய வருகிறது. ஜூலை மாதத்தில், 47,293 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், ஓகஸ்ட் மாதத்தில், இந்த எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்து 37,760 ஆக... Read more »

இலங்கையில் தனிநபர் கடன் தொகை 58 இலட்சமாக அதிகரிப்பு

இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தலா 58 இலட்சம் ரூபா கடன்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியரான வசந்த அதுகோரள, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிரகாரம் தனிநபர் கடன்... Read more »

இலங்கைக்கு உதவுமாறு இந்தியா பகிரங்கமாக அறிவிப்பு

இலங்கைக்கு உதவுமாறு இந்தியா பகிரங்கமாகவே பரிந்துரைத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கையும்,சர்வதேச நாணய நிதியமும் பணியாளர் நிலை உடன்படிக்கையை எட்டியுள்ளமை குறித்து கருத்து தெரிவித்த அவர், அதன் முன்னேற்றம் குறித்து இந்தியா அவதானிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

துன்னாலையில் 4 நாட்களாக தொடரும் மோதல்! நேற்றிரவும் கடும் பதற்றம், பொலிஸார், அதிரடிப்படை குவிப்பு… |

யாழ்.வடமராட்சி  துன்னாலை மேற்கில் உள்ள இரு கிராமங்களுக்கிடையில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியான மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  பலரை தேடி வருவதாக நெல்லியடி பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை குறித்த பகுதியில் 7 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், கற்கள்,... Read more »

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் வெளியான தகவல்!

ஒக்டோபர் மாதம் வரையிலான எரிபொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (03) காலை இடம்பெற்றதாக தனது டுவிட்டர் பதிவில் கஞ்சன விஜேசேகர பதிவிட்டுள்ளார். செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவை, போக்குவரத்து... Read more »

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்: வெளியாகியுள்ள அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. செப்டெம்பர் 03 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 1 மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட... Read more »

வங்கிகளுக்கு மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு

அனுமதி பெற்ற வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் தனிப்பட்ட அடையாள எண்களை (UINs) சம்பந்தப்பட்ட வங்கி அமைப்புகளில் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு இலங்கைமத்திய வங்கி அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. தகவல் முகாமைத்துவ செயல்முறையின் நிலைத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்காக இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில்,மத்திய வங்கி அனைத்து வர்த்தக... Read more »

கோட்டாபயவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள போதிலும் அவர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாலக கொடஹேவா, கோட்டாபயவின் வியத்ம அமைப்பின் பலமான அங்கத்தவராக செயற்பட்டுள்ளார்.... Read more »