இராணுவம் ஏற்பாடு செய்த ஒளி விழா ஹாட்லிக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

இராணுவத்தின் 551 வது படைப்பிரிவினரால்   வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியமஸ இணைந்து இராணுவ அனுசரணையில் இன்று பிற்பகல் 6:30 மணியளவில் ஒளிவிழா இடம் பெற்றுள்ளது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி விழா மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்க்குள் வரவேற்கப்பட்டு அங்கு... Read more »

உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் அரசியல் சார்பற்றது! மகிந்த அமரவீர

விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும். அதேபோல நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். நுவரெலியா நகர மண்டபத்தில் நேற்று (22.12.2022) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட உணவு... Read more »

A/L மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களுக்கான இறுதி திகதி நீடிப்பு

2021(2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை 2022 டிசம்பர் 30 வரை... Read more »

பருத்தித்துறை பிரதேச கலாசார விழா புலோலி கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது

குறித்த ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்கள் மங்கல வாத்திய இசையுடன் மலர்மாலை அணிவித்து விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு விழா மண்டபத்தில் மங்கல விளக்குகளை நிகழ்வின் பிரதம விருந்தினர் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைகஙளத்தின் பிரதி பணிப்பாளர்  திருமதி இராஜமல்லிகை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர்... Read more »

ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் வரம்பை திருத்தியமைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பாதுகாப்பு அமைச்சு, பெண்கள்,சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல், கல்வி அமைச்சு,சுகாதார அமைச்சு,விவசாய அமைச்சு மற்றும் வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சகங்களில் உள்ள பல... Read more »

மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை: 47 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளை... Read more »

மட்டக்களப்பு கூளாவடியில் நகைக்கடை உடைத்து கொள்ளையிட்ட கொள்ளையர் இருவருக்கு 14 நாள் விளக்கமறியல்

மட்டக்களப்பு  தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் நகைக்கடை ஒன்றை உடைத்து வெள்ளி நகைகளை  கொள்ளையிட்ட இருவரை எதிர்வரும் ஜனவரி 4 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டார். குறித்த பகுதியிலுள்ள... Read more »

சீனாவிடமிருந்து எரிபொருள் நன்கொடை -விவசாயிகளுக்கு அடித்த அதிஷ்டம்

சீனாவிடமிருந்து நன்கொடையாக கிடைத்துள்ள எரிபொருளை ஒரு ஹெக்டயருக்கும் குறைந்த நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கம் இலங்கைக்கு 10.06 மில்லியன் லீற்றர் எரிபொருளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதில் 6.98 மில்லியன்... Read more »

போதைப்பொருள் – சிறைவைக்கப்பட்டுள்ள மாணவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அண்மைக்காலமாக அதிகரித்து செல்வதாக இன்டர்போல் உட்பட பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக மாணவர்களை இலக்கு வைத்து அண்மைக்காலமாக போதைப்பொருள் விற்பனை மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இதனால் மாணவர்களின் புத்தகபைகளை சோதனையிடும் நடடிவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தி... Read more »

மட்டக்களப்பில் கால்நடை பதிவதற்கு 26 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற கால்நடை வைத்திய அதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்கவினரால் கைது

மட்டக்களப்பில்  கால்நடைகளுக்கு அடையாள இலக்கமிடுவதற்கு  பண்ணையாளர் ஒருவரிடம் 26 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற  இலுப்படிச்சேனை கால்நடை காரியாலய வைத்திய அதிகாhயை காரியாலயத்தில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று வியாழக்கிழமை (22) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த... Read more »