மட்டக்களப்பில் கால்நடை பதிவதற்கு 26 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற கால்நடை வைத்திய அதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்கவினரால் கைது

மட்டக்களப்பில்  கால்நடைகளுக்கு அடையாள இலக்கமிடுவதற்கு  பண்ணையாளர் ஒருவரிடம் 26 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற  இலுப்படிச்சேனை கால்நடை காரியாலய வைத்திய அதிகாhயை காரியாலயத்தில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று வியாழக்கிழமை (22) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்திலுள்ள கால்நடை பண்ணையாளர் ஒருவர் தனது கால்நடைகளை காதில் இலக்கமிட்டு அடையாளப்படுத்தி பதிவதற்கு கால்நடை திணைக்களத்தில் விண்ணப்பித்த போது  கால்நடை வைத்திய அதிகாரி அதனை செய்வதற்கு  26 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பண்ணையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் பண்ணையாளர் சம்பவதினமான நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வைத்தியர் கோரிய 26 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக அவரது காரியாலயத்தில் வைத்து வழங்கியபோது அங்கு கால்நடை பண்ணையாளர்கள் போல வேசமிட்டு இருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் சுற்றிவளைத்து வைத்தியரை கைது செய்தனர்.

இதனையடுத்து விசாரணையின் பின்னர் வைத்தியரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஜனவரி 4 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

Recommended For You

About the Author: Editor Elukainews