142 பொருட்களுக்கான எச்.எஸ் குறியீட்டு வர்த்தமானி விரைவில்!

இறக்குமதி-ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன், ஜனவரி 1 முதல் 142 பொருட்களுக்கு எச்.எஸ் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் தினத்தில் வெளியிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read more »

எதிர்வரும் மார்ச்சில் மீண்டும் போராட்டம் தலைதூக்கும்: உதய கம்மன்பில

மின்கட்டண அதிகரிப்பு, மின் விநியோக துண்டிப்பு ஆகிய காரணிகளினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டில் மீண்டும் போராட்டம் தோற்றம் பெற அதிகம் வாய்ப்புள்ளது என பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு... Read more »

கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

வெலிமடை, சில்மியாபுர பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (01) பிற்பகல் சிறுமியின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.​ வெலிமடை, சில்மியாபுர பிரதேசத்தை சேர்ந்த என். எஸ். ஹமிதா என்ற சிறுமியே... Read more »

2022 க்கான உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்!

எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை தொடர்பில் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட திகதியில் உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் செயற்பட்டு வருவதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... Read more »

நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

மாத்தறை கடலில் நீராடிய 17 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள், நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டனர். எனினும் அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார்... Read more »

ஏ.டி.எம் இயந்திரங்களில் பண மோசடி செய்த கும்பல்! பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய,வங்கிகளின் ஏ.டி.எம் (ATM) இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் குறித்து தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​ இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட... Read more »

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை சாரதி அனுமதி பத்திரம்

இலங்கை ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டு முதல் QR குறியீட்டுடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குஸலானி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான... Read more »

சஞ்சீவி விற்பனை நிலையம் யாழ் மாவட்ட பெண்கள் சமாசத்திடம் விழுது நிறுவனத்தால் கையளிப்பு…!

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் செயற்திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியன் எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் உள்ளூர் பெண் சுய தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்க்காக திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் நிறுவப்பட்ட சஞ்சீவி மாதர் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையமானது விழுது நிறுவன திட்ட ஆலோசகர்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆறுமுகநாவலர் 200ஆவது ஆண்டு நிறைவு விழா…!

வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆறுமுகநாவலரின் 200ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை  மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது. முன்னதாக நாவலர் பெருமானின் திருவுருவம் பல்லக்கில் ஆ. சிவநாதன் தலைமையில் செல்வச்சந்நிதியான்  ஆலயத்திலிருந்து ஊர்வலமாநசல்வச் சந்நிதியான் ஆச்சிரமம் வரை  எடுத்து வரப்பட்டு... Read more »

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகள்! ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகள், இந்த வருடம் ஓரளவு தணிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று (01) விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை ஆளுநர் தெரிவித்துள்ளார்.... Read more »