சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆறுமுகநாவலர் 200ஆவது ஆண்டு நிறைவு விழா…!

வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆறுமுகநாவலரின் 200ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை  மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
முன்னதாக நாவலர் பெருமானின் திருவுருவம் பல்லக்கில் ஆ. சிவநாதன் தலைமையில் செல்வச்சந்நிதியான்  ஆலயத்திலிருந்து ஊர்வலமாநசல்வச் சந்நிதியான் ஆச்சிரமம் வரை  எடுத்து வரப்பட்டு அங்கு ஆசியுரையை சிவஶ்ரீ சோ. தண்டபாணிக தேசிகர் சுவாமிகள் நிகழத்தினார்.
அருளுரை – ஶ்ரீசோமசுந்தர பரமாச்சாரியார்  –  2 ஆவது மகா சந்நிதானம்  அவர்களும் நிகழ்த்தினர்.
ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பணி, சைவப்பணி தொடர்பாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார்,  சைவப்புலவர்  ச. முகுந்தன், ஆகியோரும் நினைவுரை நிகழ்த்தினர்.
தொடரதந்து கந்த . சத்தியதாஸன்  குழுவினராலும் வில்லுப்பாட்டு, பண்ணிசை, என்பனவும் நிகழ்த்தபபட்துடன் பாமலையை  என். எஸ் பிரதீபன் குழுவினர் நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதே வேளை சிறில சிறி ஆறுமுக நாவலரின் நினைவு மலர் வெளியீடும் இடம் பெற்றது. இதில்  அறிமுகவுரையை திரு.இரா. செல்வவடிவேல் நிகழத்தினார். மதிப்பீட்டுரையை  .மு.கௌரிகாந்தன்  நிகழ்த்தினார்.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன் –  ஞாபகர்த்தமாக தரம் – 01 தொடக்கம் உயர்தரம் வரையான் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஆண்மீக தலைவர்கள், கல்வியலாளர்கள், அடியார்கள், சந்நிதியான் ஆச்சிரம சுவாமிகள் கௌரவ கலாநிதி மோகனதாஸ், மற்றும் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews