தேன் என கூறி சீனி பாணி வியாபாரம்! 41 லீற்றர் சீனி பாணியுடன் மோசடி வியாபாரி சிக்கினார்… |

தேன் என கூறி சீனி பாணி காய்ச்சி விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் சுகாதார பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.  குறித்த சம்பவம் வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றிருப்பதாக வவுனியா சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர். தேன் என சீனிப்பாணியை நபரொருவர் விற்பனை செய்வதாக வவுனியா... Read more »

வேப்பம் மரத்தின் கிளைகளை வெட்டியபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இளைஞன் 18 வயதான இளைஞன் பலி!

யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று (05) மாலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுவன்... Read more »

கையில் குழந்தையுடன் கடையில் பொருட்கள் வாங்க சென்ற கர்ப்பவதி பெண்ணுக்கு நடந்த பயங்கரம்!

கையில் குழந்தையுடன் கடை ஒன்றுக்குள் பொருட்களை வாங்க சென்றிருந்த கர்ப்பவதி பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் மத்தேகொட – குடமாதுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.  குறித்த சம்பவம் கடையிலிருந்த சீ.சி.ரீ.வி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் குழந்தையை கையில் வைத்திருந்தபோது முகமூடி அணிந்த... Read more »

ரூபாவின் பெறுமதியில் கடும் உயர்வு! அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைகிறது

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக இவ்வாறு பொருட்களின் விலை குறையக் கூடும்... Read more »

மரக்கறி ஏற்றச்சென்ற லொறி விபத்து: 14 பேர் படுகாயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற லொறி கொண்டக்கலை பகுதியில் பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளானவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள... Read more »

அனலைதீவில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது….!

அனைலதீவு பாலத்திலிருந்து ஊர்காவற்துறை கண்ணகை  அம்மன் பாலம் ஊடாக இன்றைய தினம் 05.03.2023 ஞாயிற்க் கிழமை காலை 8:00 மணியளவில் கடத்தவிருந்த சட்டவிரோதமான ஒரு தொகை மாட்டிறைச்சியையும்,  அதனை கடத்தி வந்த நபரையும் அனலைதீவில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார்  கைது செய்துள்ளனர். இக் குற்றச்... Read more »

கணவருடன் தகராறு, ஒன்றரை வயது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிய தாய்!

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, அவரை பழிவாங்குவதற்காக ஒன்றரை வயதான தமது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் தாயொருவரை கைது செய்துள்ளதாக உடப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உடப்பு, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியே, தமது ஒன்றரை வயதான... Read more »

யாழ்.மாநகர சபை புதிய மேயர் தெரிவு குறித்து கலந்துரையாடல்

யாழ். மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டம் இன்று (05.03.2023) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் யாழ். மாநகர... Read more »

யாழ் தேவி தடம்புரள்வு : வழமைக்குத் திரும்பியது புகையிரத சேவை

அனுராதபுரத்திலிருந்து நேற்றிரவு கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த யாழ்தேவி புகையிரதத்தின் பெட்டி ஒன்று தடம்புரண்ட நிலையில், குறித்த புகையிரதப் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வந்ததன் காரணமாக மஹவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகம இடையிலான வீதி தடைப்பட்டதுடன்... Read more »

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பாரிய தீ : பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (04.02.2023) இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியா – தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய எரிபொருள்... Read more »