இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பாரிய தீ : பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் (04.02.2023) இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசியா – தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது.

குறித்த சேமிப்பு கிடங்கில் நேற்றைய தினம் பாரியத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து,  கிடங்கிலிருந்த எரிபொருள் தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த பாரியத் தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாகவும் 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தெற்கு பபுவா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் மின்னல் தாக்கியதில் தீ பிடித்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews