பொது மக்களுக்கான எச்சரிக்கை!

கடும் வெப்பத்துடனான காலநிலையால் அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை 250 மில்லிமீற்றர் நீர் அருந்த வேண்டும் என சுகாதாரத்துறை பொதுமக்களை கோரியுள்ளது. இதன்மூலம் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களை தடுக்க முடியும் என விஷேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். மதிய நேரங்களில் தாகம் எடுப்பதற்கு... Read more »

ஆய்வாளா் முனைவா் மருதுமோகன் எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போா் கூடத்தில்.

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா எதிா்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக... Read more »

கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிக கழகம் பூரண ஆதரவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெற உள்ள வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் யாழ்ப்பாண வணிகக் கழகத்திற்கும் தமிழ் கட்சிகளின் பிரதிகளுக்கும் இடையிலான சந்திப்பு வணிக... Read more »

பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி வடமாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது!

வடக்கு கிழக்கு பெண்கள் அணி மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகிய ஒன்றிணைந்து பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி வடமாகாண ஆளுநருடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் தென் இலங்கையை சேர்ந்தவர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்  இன்று 20.04.203 முன்னெடுக்கப்பட்டது.  வடக்கு கிழக்கு தழுவி குறித்த போராட்டம் இன்று 10 மணிக்கு இடம்பெற்றது. குறித்த போராட்டம் பழைய மாவட்ட செயலகம் முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது Read more »

முறைப்பாட்டுக்கு நடவடிக்கை இல்லை – மாநகர சபை முன் தனி ஒருவர் போராட்டம்…!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் கழிவு... Read more »

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தை உயர்தரத்துடன் கூடிய பாடசாலையாக தரமுயர்த்த அதிகாரிகள் பின்னடிப்பது ஏன்? கிராம மக்கள் விசனம்

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தை உயர்தரத்துடன் கூடிய பாடசாலையாக தரமுயர்த்த அதிகாரிகள் பின்னடிப்பது ஏன்என கிராம மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தினை உயர்தரத்துடன் கூடிய பாடசாலையாக தரமுயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும்,... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வும் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வும் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சமயத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதேச... Read more »

மகன் தாக்கியதில் தந்தை பலி தாய் படுகாயம்

கிளிநொச்சி தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 1.00 மணியலவில் தந்தை தாய் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது... Read more »

யாழில் வீசப்பட்ட நாட்டுக் குண்டு

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வாகனம் பழுது பார்க்கும் நிலையம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டு ஒன்றினை நேற்றிரவு வீசியுள்ளனர். இந்த வெடிகுண்டு வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்து கார் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த... Read more »