சுதந்திர ஈழமா இல்லையா சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி தீர்மானியுங்கள், சிவாஜிலிங்கம் அறைகூவல்..!

இலங்கை நாட்டுக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, இதனால் சுதந்திர தமிழீழமா இல்லையா என்று சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான  எம் கே சிவாஜிலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார்.   இலங்கைக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, அவர்களிடம்... Read more »

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் தற்காலிக நிறுத்தம்…!

மட்டக்களப்பு விவாசாய அமைப்புக்கள் வேளாண்மை செய்த சிவப்பு, வெள்ளை நெல்களை கொள்வனவு செய்யுமாறு கோரி மட்டு மாவட்ட செயலகத்தின் முன்னாள் நேற்று செவ்வாய்க்கிழமை (25) ஆரம்பிக்க இருந்த  சுழற்சிமுறை உண்ணாவிரதம் கிழக்கு மாகாண ஆளுநரின் உறுதி மொழியையடுத்து கைவிட்டுள்ளதாக விவாய அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.  மாவட்டத்தில்... Read more »

மனிதாபிமானமற்ற செயலுக்கு அங்கஜன் எம்.பி கண்டனம்!

குழந்தையின் உடலத்தோடு நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்த அந்த தாய் பட்ட வேதனையை என்னால் உணரமுடிகிறது. இந்த அலைச்சல்களுக்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தையின் சடலத்தையும், தாயையும் நோயாளர் காவு வண்டியில்... Read more »

கட்டைக்காட்டில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி இன்றும் முறியடிப்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இரண்டாவது நாளாக இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9  மணியளவில் இடம் பெற்றுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை  கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக  நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து  வருகை தந்திருந்தனர்.... Read more »

ஜனாதிபதி – சி.வி.விக்னேஸ்வரன் இடையில் நேற்றிரவு கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை இடம்பெறவுள்ள சர்வகட்சி கூட்டம் மற்றும் 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடியதாக... Read more »

வாக்குவாதம் கொலையில் முடிந்தது!

பாணந்துறை திக்கல சந்தியில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதுடன், தாக்குதலுக்கு உள்ளான நபர் பாணந்துறை தெற்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பாணந்துறை தொட்டவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி... Read more »

யாழில் பால் புரைக்கேறி 9 மாத குழந்தை உயிரிழப்பு!

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த... Read more »

பாரிய கூட்டணியில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பாரிய கூட்டணியில் போட்டியிடுவார். இந்த கூட்டணி சிறிலங்கா சுதந்திர... Read more »

சமிக்கையை மீறி செல்வதால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது – கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர்

இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது என கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். கடந்த 13.07.2023 தொடக்கம் 5 மாதங்களின் பின்னர் மீண்டும் 15.07.2023 அன்று தொடக்கம்  புகையிரத சேவை மீண்டும் வழமைபோல் ஆரம்பித்துள்ளது.... Read more »

யாழ். மாவட்ட செயலகம் இவ்வருடமும் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் தேசிய மட்டத்தில் முதலாமிடம்

யாழ். மாவட்ட செயலகம் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் ஒன்பதாவது தடவையாக தேசிய விருதிற்கு தகுதி பெற்றுள்ளது. இத் தேசிய விருது வழங்கும் நிகழ்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.... Read more »