யாழ். மாவட்ட செயலகம் இவ்வருடமும் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் தேசிய மட்டத்தில் முதலாமிடம்

யாழ். மாவட்ட செயலகம் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் ஒன்பதாவது தடவையாக தேசிய விருதிற்கு தகுதி பெற்றுள்ளது.
இத் தேசிய விருது வழங்கும் நிகழ்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்டத்திற்கான தேசிய விருது முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தற்போதைய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்திற்கான தேசிய விருதினை யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு பதிலாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மேலும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளர் ஆகியோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
மேலும் , யாழ். மாவட்ட தேசிய மட்டத்திலான பண சேகரிப்பின் அடிப்படையில் முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே கோப்பாய், சண்டிலிப்பாய், சாவகச்சேரி பிரதேச பிரதேச செயலகங்கள் பெற்றுக்கொண்டன. இவ்விருதுகள் அவ் பிரதேச செயலக செயலாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு சபையின் தலைவர், பொதுமுகாமையாளர், பிரதிமுகாமையாளர், அரசாங்க அதிபர்கள், முன்னாள் அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச திட்டப்பணிப்பாளர்கள , சமுர்த்திப் பணிப்பாளர்கள், பிரதேச செயலர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் , மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews