சுதந்திர ஈழமா இல்லையா சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி தீர்மானியுங்கள், சிவாஜிலிங்கம் அறைகூவல்..!

இலங்கை நாட்டுக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, இதனால் சுதந்திர தமிழீழமா இல்லையா என்று சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான  எம் கே சிவாஜிலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார்.  
இலங்கைக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, அவர்களிடம் கொஞ்சிக் குலாவுவதற்க்கோ அல்லது அவர்கள் போடும் எலும்புத் துண்டை நக்குவதற்க்கும் நாங்கள் தயாரில்லை ஏன்றும் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற சிங்கள காடையர்களாலும் அரசாங்கத்தாலும் வெலிக்கடை சிறச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை உட்பட்ட 53 தலைவர்களது 40 வது நினைவேந்தல் நினைவில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது

1983 ம் ஆண்டு ஜீலை மாதம் 25 ம் திகதி, 27 ம் திகதி கொழும்பு வெலிக்கடையிலே, கொழும்பு வெலிக்கடை செய்  சிறையிலே படுகொலையிலே எங்களுடைய 53 தலைவர்கள் எங்களுடைய தலைவர்கள் குட்டிமணி தங்கத்துரை ஜெகன் உட்பட அத்தனை பேருக்கும் அதேபோல இந்த போராட்டத்திலே படுகொலை செய்யப்பட்ட அத்தனை தலைவர்களுக்கும், அதே போல 500 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட அனைத்து இயக்கங்களின் மாவீரர்கள் வீர மறவர்களுக்கும், இதுவரை போராட்டத்தால் இலங்கை அரசாகத்தலும், சிங்கள காடையர்களாலுல் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கும், ஜீலை படுகொலையில் படுகொலை செய்யப்பட்ட மூவாயிரத்திற்க்கு மேற்பட்ட மக்கள் உள்ளடங்கலாக கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும், நாங்கள் செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலி வீர வணக்கம் எங்களுடைய தமிழர் தாயகத்திலே எங்களை நாங்களே அழக்கூடிய ஒரு தீர்வை வென்றெடுப்பதும், அதே போல் சுதந்திரத்திறக்கான பொது சன வாக்கெடுப்பை நாடாத்தி அதுதான் சுய நிர்ணய உரிமை. அதை விட சுய நிர்ணய உரிமை என்று சொல்லிக்கொண்டு நாங்களாகவே சமத்துவம் என்று சொல்வதிலே அர்த்தம் இல்லை.

சுதந்திர தமிழீழமா இல்லையா என்ற ஒரு தீர்வை அல்லது இலங்கை அரசாங்கம. வைக்கின்ற மாகாண சபையா என்கின்ற ஒரு சர்வதேச சமூகத்தை பார்த்து கேட்கின்றோம் நீங்கள் இந்த வாக்கெடுப்பை இந்தியா அமெரிக்கா உட்பட்ட சர்வேச சமூகம் ஐக்கிய நாடுகளுடைய கண்காணிப்பிலே சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.  புலம் பெயர்ந்தவர்கள் கூட வாக்களிக்கக் கூடிய பொது சன வாக்கெடுப்பு இடம் பெற வேண்டும், அதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்.
அதை விடுத்து இலங்கைக்குள்ளே எந்த தீர்வும் இல்லை,  அவர்களிடம் கொஞ்சிக் குலாவுவதற்க்கோ அல்லது எலும்பு துண்டுகளை நக்குவதற்கோ நாங்கள் தயாராக இல்லை  என்பதனை ஈழத் தமிழினம் சர்வதேச சமுகத்திடம் உறுதியாக விடுவதன் ஊடாகத்தான் புலம் பெயர் தேசத்திலே இருக்கக்கூடிய அமைப்புக்கள், அந்தந்த நாடுகளிலே இருக்கக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஆட்சியாளர்களையும் பொது சன வாக்கெடுப்பு தீர்மானங்களை உங்களுடைய நாடுகளின் பாராளுமன்றங்களுலும், சபைகளிலும் நிறைவேற்றுங்கள் என்று கேட்பதும்,  எங்களுடைய தாய் தமிழகத்திலும் அதேபோல தாயகத்தில் இருக்கக்கூடிய எல்லோரும் ஒருமித்த குரலிலே இதை வலியுறுத்துகின்றன பொழுதுதான் எங்களுடைய விடுதலை கிடைக்கும், நாற்பது ஆண்டுகள் கடந்தும் இனப்படுகொலை நடைபெற்று  மிகவும் மிக மோசமாக நாற்பது ஆண்டுகள் கடந்தும் எங்களுக்கு ஒரு விடிவு இல்லை.
ஆகவே இனிமேலும் இருப்போமேயானால் எங்களுடைய இனமே காணாமல் போய் எங்களுடைய நிழல்கள் கூட எங்களுக்கு பின்னால்  நிற்காது என்ற நிலமை உருவாக்கப்படும்,
ஆகவே சிங்கள பௌத்த அட்டாகசம், இதற்கு முடிவாக சுதந்திரத்திற்க்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பை ஈழத்தமிழினம் வலியுறுத்த வேண்டும், அதே போல அனைத்து அமைப்புக்களும் வலியுறுத்த வேண்டும் இதனை  வெலிக்கடை படுகொலை நாளில் நினைவு கூறுகின்றேன்.

Recommended For You

About the Author: Editor Elukainews