பல இடங்களில் இடியுடன் மழை

மேல், தென், சப்ரகமுவ மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

திருகோணமலையில் துப்பாக்கி ரவைகள் மீட்பு..!!

திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் நேற்று   (23) பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன. வயல் உரிமையாளர்களினால் மொரவெவ பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.   வயல் உரிமையாளர்களினால் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது... Read more »

யாழ். சாவகச்சேரியில்18 வயது யுவதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். டச்சு வீதியிலுள்ள வீட்டிலிருந்து யுவதியின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டது. சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more »

தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் பொங்குவதற்கு தடை

தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவடி கிராமத்தில் உள்ள மிகப்பழமையான கந்தசாமிமலை முருகன் ஆலயத்தில் மாதாந்தம் கிராம மக்களால்... Read more »

குவைத்தில் இலங்கையர் மீது துப்பாக்கிச் சூடு!

குவைத் நாட்டில் சாரதியாக பணிபுரியும் இலங்கையர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜாங்கனையைச் சேர்ந்த கே.பி.லக்ஷ்மன் திலகரத்ன என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சுடப்பட்டுள்ளார். சுமார் 8 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்து வரும் இவர் இறுதியாக கடந்த 2022 ஆம்... Read more »

சீனாவில் அதிவேக வீதியில் சுமார் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின. 

அதாவது சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் சாலைகளில் பனி சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுஜோ நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். பனி படர்ந்த அந்த... Read more »

ஜனாதிபதி – அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் சந்திப்பு..!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்,  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் (Richard Verma) ரிச்சர்ட் வர்மாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... Read more »

வெற்றிலைக்கேணியில் விபத்து-செய்தி  சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இன்று 23.02.2024 இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதோடு இதனை செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார். வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார்... Read more »

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆலோசனை குழு கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் கூடியுள்ளது

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆலோசனை குழு கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் கூடியுள்ளது. மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் , பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், அரியநேந்திரன், சிறிநேசன்,... Read more »

வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களுக்கு சென்ற மக்கள்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 7 ஆலயங்களுக்கு வழிபாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (23 ) வெள்ளிக்கிழமை ஆலய நிர்வாகத்தினர், பூசகர்களின் ஏற்பாட்டில் ஆலயத்துக்கு செல்லவுள்ளவர்களின் பெயர்கள் திரட்டி அதனை பிரதேச செயலகத்துக்கு வழங்கி... Read more »