யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு பாலச்சந்திரன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கவனத்தில் கொண்டு, பாராளுமன்றத்தில் உணவு மற்றும் காகிதாகிகளைப் பயன்படுத்துவதை கூடியவரை மட்டுப்படுத்துமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய, பாராளுமன்றத்தில் நாளாந்தம் தயாரிக்கப்படும் உணவ வகைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தகவல் பரிமாற்றத்துக்காக... Read more »
ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை பொறுத்தமட்டில் நாங்கள் தனியாக முடிவு எடுப்பதை காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார். இன்றைய தினம் இடம்பெற்ற கட்சியின்... Read more »
பதவிகளை ராஜினாமா செய்த அமைச்சர்களிடமிருந்து அரச சொத்துக்களை உடன் பெற்றுக் கொள்ளுமாறு திறைசேரி உத்தரவிட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இவ்வாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பிலான சுற்றறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையில் அரசாங்க அமைச்சர்கள் 26 பேர் பதவி விலகியுள்ளனர். திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல... Read more »
நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் அந்த வீட்டிற்கு வந்த 6 பேர் கொண்ட இனந்தெரியாத கும்பல் குறித்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்துவிட்டு தப்பித்துச்... Read more »
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயாவின் இணைப்புச் செயலாளராக இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் தனிப்பட்ட உத்தியோகத்தர் பட்டியலில் நியமிக்கப்படும் ஆளணி மூலமே இந்த நியமனம் வழங்கப்படுகின்றது. திருமதி.இமெல்டா சுகுமார் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களின் அரச அதிபராக பணியாற்றதோடு ஓய்வின் பின்னர் நாட்டில்... Read more »
கடந்த தேசிய அரசாங்கத்தை ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற... Read more »
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கார், ஹெலிகாப்டர், இராணுவ விமானம் மற்றும் ரயிலில் பயணம் செய்து, உக்ரைன் தரைநகர் கிவ் நகருக்குச் சென்று, அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளார் என டவுனிங் ஸ்ட்ரீட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யப் படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் தலைநகருக்குச்... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்றையதினம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அம்பலாங்கொட பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.... Read more »
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.” என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... Read more »