இலங்கையில் கட்டமைத்த இனவழிப்பு தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பும் என்னும் நூல்வெளியீடு

தமிழ் மக்கள் கூட்டணியின் எற்பாட்டில், நூலாசிரியர் செல்வேந்திரா சபாரட்ணம் எழுதிய “இலங்கையில் கட்டமைத்த இனவழிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பும்” என்னும் நூல்வெளியீடு நேற்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் க.வி.விக்கினேஸ்வரனின் தலைமையில் அவரது வாஸ்த்துதலத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம... Read more »

சிங்கராஜ வனப்பகுதியில் விசேட சோதனை

சிங்கராஜ வனப்பகுதியில் 3 நாட்கள் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வன பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது. காடுகளை அழித்தல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இது தெரியவந்துள்ளது. வனப் பாதுகாப்புத் தளபதியின் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட... Read more »

சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது Read more »

நாளை முதல் மாபெரும் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி நாளை (22) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதேவேளை குறித்த போராட்டத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக ஆதரவளிக்கும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நாளாந்த சம்பளத்தை... Read more »

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தில் குழப்பம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு எம்மால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இதுவரையில் எவ்விதமான மறுப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவருடைய வருகைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஈரானின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண... Read more »

கனடாவுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவு..!!

கனடாவுக்கு விருந்தினர் விசாவில் செல்லும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமான  அளவு குறைவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற் பகுதி வரையில் பெருந்தொகையான இலங்கையர்கள் கனடாவுக்கு  விருந்தினர் விசாவில் சென்றுள்ளனர். எனினும் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் விருந்தினர்... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையான ஊர்வலம் இன்று நள்ளிரவு ஆரம்பமாகவுள்ளது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் இன்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட ஆராதனையுடன்... Read more »

நாட்டின் பல பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்தோடு, ஊவா மாகாணத்திலும் அனுராதபுரம், வவுனியா... Read more »

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் – இலங்கையின் விமானப் பயணங்களில் மாற்றம்..!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் போர் பதற்றம் காரணமாக முன்னெச்சரிக்கையாக ஸ்ரீலங்கன் விமான சேவை தமது விமானப் பயணப் பாதைகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன், லண்டன் செல்லும் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக விமான... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தொடரும் குழப்பம் – இன்று முக்கிய சந்திப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் குழு ஒன்றும் இந்த சந்திப்பில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் கட்சியின் பதில் செயலாளரினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் கூட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு... Read more »