இளைஞன் மீது வாள்வெட்டு – சிறுப்பிட்டியில் பட்டப்பகலில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் நேற்றுப் பகல் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு... Read more »

பரிசு கொடுக்க வந்ததாக கூறி மூதாட்டியின் 5 பவுண் தங்கச் சங்கிலி அபகரிப்பு!

திருகோணமலை – துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன்  வீதியில் இன்று காலை சுமார் பதினொரு மணியளவில் பரிசு கொடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த முதாட்டியிடம் இருந்து ஐந்து பவுண் தங்க செயினை அபகரித்து சென்றுள்ளதாக துறைமுகப்பொலிஸார்... Read more »

அரசினதும் பொலிஸாரினதும் அராஜகம் எல்லை தாண்டுகிறது – சுகாஷ் தெரிவிப்பு!(video)

தியாக தீபத்தினுடைய ஊர்திப் பவனியின்போது திருகோணமலையில் காடையர்களை வைத்து தாக்கிவிட்டு எமது உறுப்பினர்கள் தங்களை அச்சுறுத்தியதாக கூறி பொய்யான வழக்கை தாக்கல் செய்திருக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பில் வவுனியா நீதிமன்றத்தில்... Read more »

வைஷாலியின் கையினை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை பிறப்பித்தது. காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்... Read more »

நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது…! சுமந்திரன்

இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் சூரிய கல்வி நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழியான சிங்கள கற்கை நெறியை... Read more »

நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் இந்நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாகிறது – அங்கஜன் எம்.பி

தனக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக தனது பதவிவை துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அறிவித்துள்ளமையானது, நாட்டின் நீதித்துறை எத்தகைய சவால்களை சந்தித்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இன்றையதினம் (29)... Read more »

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி விலகியமை குறித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிக்கை…!

மிக உன்னதமான நீதித்துறையில் தலைசிறந்த அஞ்சா நெஞ்சுரத்துடன் குருந்தூர் மலை சட்டவிரோத பௌத்த கட்டுமானம், உள்ளிட்ட விவகாரங்களில் யாருக்கும் அடிபணியாமல் தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி மாண்புமிகு சரவணராசா அவர்கள் அழுத்தங்களால் பதவி விலக நிர்ப்பந்திக்கபட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக  நாட்டை வெளியேறி உள்ளமை... Read more »

மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொருக்கல்….!

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் குடும்பஸ்தர் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாக மருதங்கேணி பொலிசாரிடம் அங்கு வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் முறைப்பாடு  பதிவு செய்ததிருந்தார். இந்நிலையில் இதனை அறிந்த... Read more »

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி விலகியமை குறித்து சரவணபவன் கருத்து!

சிங்கள – பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலையே இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களும் முன்னெடுக்கவேண்டும். அதிலிருந்து விலக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீதிபதி ஒருவர் செயற்பட்டால் அவ்வாறு செய்வதற்கு இலங்கையின் சிங்கள – பௌத்த பேரினவாத கட்டமைப்பு இடம்கொடாது என்பதற்கு ஆகப்பிந்திய உதாரணம்தான் முல்லைத்தீவு மாவட்ட... Read more »

அரசாங்கத்தின் கோர முகத்தை வெளிப்படுத்திய நீதிபதி ரி. சரவணராஜாவின் பதவி விலகல்….! ரவிகரன் கண்டனம்.

முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவின் பதவி விலகலின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் கோர முகம் வெளிப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த அனைத்து நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு... Read more »