அனாதரவான படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா மீட்பு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை கடற்கரை  ஒரத்தில்  அனாதரவாக தரித்து நின்ற படகிலிருந்து 50கீலோகிராம்  கஞ்சாவ பொறிகள் இன்று  திங்கள் கிழமை அதிகாலை  ராணுவம், மற்றும் போலீஸ்சாரும் இணைந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்ய படவில்லை. வல்வெட்டித்துறை இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய... Read more »

மது அருந்திய இடத்தில் தகராறு! அடித்துக் கொல்லப்பட்ட வயோதிபர்..!

புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு  அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி  மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது அருந்தும் இடத்தில் இருவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி பொல்லுகளாலும் கோடரியாலும் தாக்கப்பட்டதில் இருவரும்... Read more »

கொலை செய்யப் போவதாக கூறி 1.5 மில்லியன் கப்பம் பெற்ற 3 பேர் கைது!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை மிரட்டி கப்பமாக பணம் பெற்ற குற்றச்சாட்டில் 3 பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனக்க ரத்நாயக்கவிடமிருந்து 1.5 மில்லியன் ரூபாவை கப்பமாகப் பெற்ற குற்றச்சாட்டிலேயே குறித்த மூவரும் கைது... Read more »

தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தரை கட்டிப்பிடித்த போதை அடிமை பலி..!

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்த சம்பவத்தில், காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (27) உயிரிழந்துள்ளார். கடந்த 15ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றது. போதைப்பொருள்... Read more »

மூன்று டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது…!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த மூன்று டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம்  பொலிஸாருக்கு இன்று  கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு செய்யப்பட்டது.  கைது செய்யப்பட்ட... Read more »

யாழ்ப்பாணத்தில் திடீரென வீதிக்கு இறங்கிய அதிபர் ஆசிரியர்கள்….!

நேற்றுமுன்தினம் இசுறுபாய முன்பாக அதிபர், ஆசிரியர்கள் நடாத்திய போராட்ட ஊர்வலத்தின் மீது அரசு நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் பாடசாலை நிறைவடைந்த பின்னர் பாடசாலைகளின் முன்பாக அதிபர், ஆசிரியர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் பெண்கள் பாடசாலை... Read more »

தாவடியில் 10 வயதுச் சிறுவனுக்கு பியர் பருக்கியவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனுக்கு பியர் பருக்கிய ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் முச்சக்கர வண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு பியரினை பருக்கியுள்ளார். இது குறித்து சிறுவனின்... Read more »

மின் கண்டனம் அதிகரிப்பின் எதிரொலி, செலுத்த முடியாது திண்டாடும் மக்கள், குப்பி விளக்கு வாழ்க்கை மீண்டும் ஆரம்பம், பலரும் பாதிப்பு….!

மந்திகை மின்சார சபை பொறியியலாளர் பிரிவில் வீடுகளின்  மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் மக்கள் பெரிதும் பதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அதிகரித்த மின்சார கட்டணம் காரணமாக மக்கள் தமது மின்சார பாவனை கட்டணத்தை பல மாதங்களாக செலுத்த முடியாத நிலையில் தொடர்ந்தும் மின்சாரம் துண்டிப்புக்கள் மின்சார சபையால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.... Read more »

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கண்டு நடுங்குவது ஏன்? பொலிஸ்மா அதிபரிடம் சுமந்திரன் எழுத்துமூலம் கேள்வி.. |

வன்முறை மற்றும் இன மற்றும் மத வெறுப்புணர்வைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு அம்பிட்டிய சுமண தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பில் இன்றையதினம் மேற்படி... Read more »

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 12 பேருக்கும் விளக்கமறியல்!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12பேரின் விளக்கமறியலை நவம்பர் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட... Read more »