மின் கண்டனம் அதிகரிப்பின் எதிரொலி, செலுத்த முடியாது திண்டாடும் மக்கள், குப்பி விளக்கு வாழ்க்கை மீண்டும் ஆரம்பம், பலரும் பாதிப்பு….!

மந்திகை மின்சார சபை பொறியியலாளர் பிரிவில் வீடுகளின்  மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் மக்கள் பெரிதும் பதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அதிகரித்த மின்சார கட்டணம் காரணமாக மக்கள் தமது மின்சார பாவனை கட்டணத்தை பல மாதங்களாக செலுத்த முடியாத நிலையில் தொடர்ந்தும் மின்சாரம் துண்டிப்புக்கள் மின்சார சபையால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.... Read more »

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கண்டு நடுங்குவது ஏன்? பொலிஸ்மா அதிபரிடம் சுமந்திரன் எழுத்துமூலம் கேள்வி.. |

வன்முறை மற்றும் இன மற்றும் மத வெறுப்புணர்வைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு அம்பிட்டிய சுமண தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பில் இன்றையதினம் மேற்படி... Read more »

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 12 பேருக்கும் விளக்கமறியல்!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12பேரின் விளக்கமறியலை நவம்பர் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட... Read more »

சங்கிலி அறுத்தவர்களை துரத்திய பெண், மோட்டார் சைக்கிளை கைவிட்டு ஓடிய கொள்ளைர்கள்..!

யாழ்.கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய், தனது தங்கச் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றபோது, சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (26) மதியம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது : நேற்றுமுன்தினம்... Read more »

வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 2 இருவர் சிக்கினர்!

மோட்டார் சைக்கிள்களை திருடி, திருடிய மோட்டார் சைக்கிள்களில் சென்று வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த இருவர் நேற்றுமுன்தினம்  கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , கொடிகாமம் , மட்டுவில் , சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் வழிப்பறி கொள்ளையர்கள்... Read more »

மாணவன் ஒருவனின் தாக்குதலுக்கு இலக்காகி இன்னொரு மாணவன் காயம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவனின் உறவினர்கள் பாடசாலைக்கு சென்று, பாடசாலையின் முன்னால் தகராறு செய்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில்... Read more »

சிலிண்டர்கள் திருடிய இருவர் கைது!

யாழ்ப்பாண நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் திருடிய இருவர் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10ற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள்மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பொலிஸ்பிரிவினர்... Read more »

வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை.

வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.  கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23... Read more »

வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்த இருவர் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்திற்குள் மது... Read more »

பாடசாலை நிகழ்வுக்கு அதிபரின்  வங்கிக் கணக்கில் பல மில்லியன் – தகவல் அறியும் சட்ட மூலத்தில் உறுதி….!

தீவக கல்வி வலயத்தின் பிரபல்யமான ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிவதாவது, யாழ்ப்பாணம் தீவகம் ஊர் புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலயத்தின் 2022ஆம் ஆண்டு 150வது... Read more »