நாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம்…!

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெங்கு பரவலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் டெங்கு... Read more »

புத்தாண்டில் இடம்பெற்ற கோர விபத்து..!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று ஹலி-ஏல ஸ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்த... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு எமது இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நாம் பெரு மகிழ்வடைகின்றோம். எமது இணையத்தளம் www.elukainews.com 34 மாதங்கள் உங்கள் ஆதரவோடு முன் நோக்கி மிக மிக வேகமாக சென்றுகொம்டிருக்கிறது. இது நீங்கள் எமக்கு கொடுத்த ஆதரவினாலேயே சாத்தியமானது.... Read more »

புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விஷேட பாதுகாப்பு..!!

புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது 14 ஆயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் குறித்த... Read more »

கிளிநொச்சியில் வீடொன்றின் மீது மர்ம கும்பல் தாக்குதல்…!

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மதுபோதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீடு ஒன்றினை தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (12) 11மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி... Read more »

சுமார் 200 கிலோ போதைப்பொருளுடன் 10 மீனவர்கள் கைது..!

சுமார் 200 கிலோ கிராம்  போதைப்பொருள் தொகையுடன் 02  மீன்பிடி படகுகள் இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இரண்டு படகுகளிலும் இருந்து 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார். மேலும் கைது... Read more »

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கு ரி.ஐ.டி.விசாரணை…!

நூல் வெளியீட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தமைக்காக தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் தலைவரான தீபச்செல்வன் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த்தேசியக் கொள்கைநிலைப்பட்ட அரசியல் தளத்தில் இயங்கும் ஈழத்தின் இலக்கியப் படைப்பாளியான கவிஞர் தீபச்செல்வன் மற்றும், கரைச்சிப் பிரதேச சபையின்... Read more »

புத்தாண்டை முன்னிட்டு சிறை கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்..!

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி டீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள விதிமுறைகள், முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக பார்வையிட வரும் நபர் வீட்டிலிருந்து கொண்டு... Read more »

போதைப்பொருட்களுக்கு அடிமையானோர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்..!

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழக்கின்றனர் என தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் கஞ்சா பாவனையை நாடியுள்ளதாகவும், கஞ்சா பாவனையில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் எனவும், ஏறக்குறைய ஒரு இலட்சம்... Read more »

சாவகச்சேரியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மன்னாரில் மீட்பு!

சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது. சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறச்சென்ற ஒருவர் தனது மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடப்பட்டிருந்தது.... Read more »