தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கு ரி.ஐ.டி.விசாரணை…!

நூல் வெளியீட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தமைக்காக தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் தலைவரான தீபச்செல்வன் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த்தேசியக் கொள்கைநிலைப்பட்ட அரசியல் தளத்தில் இயங்கும் ஈழத்தின் இலக்கியப் படைப்பாளியான கவிஞர் தீபச்செல்வன் மற்றும், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா ஆகியோர் பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரசு கட்சியின் செயற்பாடுகள், நிதிக் கையாள்கை, தமிழ்த்தேசிய நிகழ்வுகள் மற்றும் அரச எதிர்ப்பு போராட்டங்களை ஒழுங்கமைப்பவர்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி கடந்த 2024.04.04 ஆம் திகதி கொழும்பில் உள்ள ரி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு மு.ப.10.00 மணி முதல் பி.ப.1.30 மணிவரையான மூன்றரை மணிநேரங்கள் சண்முகராஜா ஜீவராஜா அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளை கடந்த 2024.02.10 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற நா.யோகேந்திரநாதனின் “நீந்திக்கடந்த நெருப்பாறு” நூல் வெளியீட்டு விழாவின் ஒழுங்கமைப்பு யாருடையது? அந்த நூல் விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் வகையில் எழுதப்பட்டதா? நிகழ்வில் பங்கேற்றவர்கள் யார்? நீங்கள் எதற்காக தலைமையேற்று நடாத்தினீர்கள்? போன்ற வினாக்களை முன்வைத்து, கடந்த 2024.04.11 ஆம் திகதி, பரந்தனிலுள்ள ரி.ஐ.டி அலுவலக்த்தில் வைத்து கவிஞர் தீபச்செல்வன் இரண்டரை மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews