நாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம்…!

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெங்கு பரவலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,000ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு  நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில்,  இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாகவும், இவ்வருடம் ஜனவரி மாதத்திற்குள் 64 டெங்கு அபாய வலயங்கள் இனங்காணப்பட்ட போதிலும் இன்று இரண்டு வலயங்களாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews