தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் : 209 பரீட்சை மண்டபங்கள் – மாகாண பணிப்பாளர் குயின்ரஸ்

நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள தரம் 5இற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வட மாகாணக் கல்விப் பணிப்பளர் யோன் குயின்ரஸ் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தரம் 5இற்கான பரீட்சை ஏற்பாடுகள்... Read more »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை இடம்பெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்படும் இடங்களில் இருக்கும் பரீட்சார்த்திகள் அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக,... Read more »

கல்வி தரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – கல்வி அமைச்சர்

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி தரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் ... Read more »

மலையகத்தில் மின் ஒழுக்கால் இருப்பிடத்தை இழந்த குடும்பங்களுக்கு சந்நிதியான் ஆச்சிரம் பல்வேறு உதவிகள்…!

மலையகத்தில் மின்னொழுக்கால் இருப்பிடத்தை இழந்த 9 குடும்பங்களுக்கு பல்வேறு உதவுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. பதுளை –  மாப்பாகல பிரிவில் உள்ள யூரித் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட  மின் கசிவால் 09 வீடுகள் எரிந்து  உடமைகள் முழுமையாக  அழிந்த நிலையில்  தற்காலிகமாக  பதுளை  மாப்பாகல தமிழ் வித்தியாலயத்தில்... Read more »

இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட போட்டியில் 20 வயது பிரிவில் வரலாற்று சாதனை படைத்தது சென் பற்றிக்ஸ் கல்லூரி!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான இறுதியாட்டம்  நேற்று (09/10/2023) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் மாலை  நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தேசிய ரீதியில் பலம் வாய்ந்த கொழும் ஷாகிராக் கல்லூரியை  சமநிலை தவிர்ப்பு உதை மூலம் 04... Read more »

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு – கல்வி அமைச்சர்!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை அமைப்புகளிலும், அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கீடுகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.... Read more »

முல்லைத்தீவு பாடசாலையில் ஆசிரியர் தினத்தில் கோஷ்டி மோதல்

முல்லைத்தீவு வலையத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்  நேற்று  திங்கட்கிழமை ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் மோதலில் ஈடுபட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியிலிருந்து வருகை... Read more »

தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்ட போட்டியில் 17 வயதுப் பிரிவில் தெல்லிப்பழை மஹாஜனா சாம்பியன்!

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவு அணி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி நேற்று 09.10.2023 திங்கள் காலை 9.30 மணிக்கு யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் குருநாகல் கவுசிகம மத்திய கல்லூரியை... Read more »

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2023 கல்வி பொது தராதர உயர் தர... Read more »

சந்நிதியான்  ஆச்சிரமத்தால் பல இலட்சம் பெறுமதியான உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்,சி சந்நிதியான் ஆச்சிரமத்தால்  மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்துக்கு  ரூபா 650,000 பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  பொறித் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டு அது  நேற்று பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குடிநீர் பொறி தொகுதி பொருத்தப்பட்டு சம்பிர்தாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு... Read more »