வடக்கு கிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினரால் அப்பியாச கொப்பிகள் வழங்கல்…!

வடக்கு கிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினரால் நேற்று தெரிவு செய்யப்பட்ட 100  பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கும் நிகழ்வு வடமராட்சி மந்திகையிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் முன்னாளர் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கும் கொப்பிகளை பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரன் வழங்கிவைத்தார்.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளான திரு.கவனத்தில், தயாபரன், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews