இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் நடாத்தப்பட்ட முதலுதவி பயிற்சி….!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்  யாழ் கிளையின்  பருத்தித்துறைப் பிரிவின் ஏற்பாட்டில் வடமராட்சி
வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முதலுதவி பயிர்ச்சி வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை 17/02/2024 வடமராட்சி வலயக்கல்வி பணிமனை மண்டபத்தில் இடம் பெற்றது,
வடமராட்சி வலய முன்பள்ளிகளின் உதவிப்பணிப்பாளர் சத்தியசீலன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் யாழ்ப்பாணத்திற்கான தலைவர் சங்கரப்பிள்ளை திரவியராசா,  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பருத்தித்துறைப் பிரிவின் தலைவார் சதாசிவம் சதானந்தன்,  செயலாளர் k,மோகனதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முதலுதவி பயிர்ச்சியினை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவி போதனாசிரியர்களான N. இலங்கேஸ்வாரன்.
செல்வி k, கஜேந்தினி ஆகியோர் வழங்கிவைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews