தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பூரண ஆதரவு!

தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் கடந்த  07/09/2024  சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திபின்போது சம்மேளன நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர். இதன்போது, திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின்... Read more »

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிழக்கில் இடம்பெற்ற போராட்டத்திற்கு நீதிமன்றத் தடை

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது ஒப்படைக்கப்பட்ட பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு நீதி கோரி கிழக்கு மாகாண தாய்மார்கள் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை நீதிமன்ற உத்தரவைப் பெற்று  தடுத்து நிறுத்திய பொலிஸார் தாய்மார்களின் போராட்டத்தில் கலந்து... Read more »

தமிழரசு கட்சி தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு!

தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று (29) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு; திருகோணமலையில் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரம்!

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சனதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் திருகோணமலை மாவட்டத்தில் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு செயற்பாடுகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தும்வகையில் மாவட்ட அலுவலகம் நேற்று... Read more »

ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு பொலிஸார் இடையூறு செய்தமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியொன்று தேர்தல் ஆணையாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில்... Read more »

சாணக்கியன் மன நோயாளியா? வெளியான அதிர்ச்சித் தகவல்! சுப்பையா என்ற முதியவர் அதிரடி

இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களுக்கு என்ன நடந்தது? ஏன் அவர் இவ்வாறு மாறி, மாறிப் பேசி தமிழ்த் தேசியத்தை அழிக்கிறாரோ தெரியவில்லை என்று மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளரான சுப்பையா என்ற முதியவர் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.சிறீலங்காவில் இடம்பெற இருக்கின்ற 9... Read more »

தமிழ் பொது வேட்பாளரின் சின்னம் சங்கு..!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது. வடக்குக் கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்திருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள்... Read more »

தமிழ் பொது வேட்பாளர் யார், சற்றுமுன் வெளியான செய்தி…!

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகி உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியனேந்திரன். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை... Read more »

தமிழ் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை புரிந்துணர்வு ஒப்பந்தம், முழுமையான விபரம்..!

தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று திங்கட்கிழமை சரியாக 12:00. மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன் முழு விபரமும் வருமாறு. ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கில் தமக்கென... Read more »

தமிழ் தேசிய கட்சிகளுக்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு  ஒப்பந்தம் சற்றுமுன் கைச்சாத்து…!

தமிழ் தேசிய கட்சிகளுக்கும், தமிழ் மக்கள் பொதிச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு  ஒப்பந்தம் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பொதுச்சபையின்  செயற்பாட்டாளர் பேராசிரியர் K.T. கணேசலிங்கம்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கட்சிகள் சார்பில். பாராளுமன்ற உறுப்பினரும். தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் ... Read more »