யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தற்போதும் உள்ளதுடன், நாட்டில் ஒமிக்ரோன் பரவல் அபாயமும் காணப்படுகின்றது. எனவே சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய வல்வெட்டித்துறை பட்ட திருவிழா காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படவேண்டும். மேற்கண்டவாறு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற... Read more »
நாட்டில் சகல அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ கூறியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் தொிவித்துள்ளதாவது, அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.... Read more »
யாழ்.வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றய தினம் குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டதாக தொியவருகின்றது. மேலும் சம்பவம் தொடர்பில் தொியவருவதாவது, வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள்... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையல் மலோியா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நோயாளிக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மூளை மலேரியாவினை ஏற்படுத்தும் கிருமித் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இந்நபர் தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர். கடந்த ஒரு மாதத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்ட மூன்றாவது மலேரியா... Read more »
யாழ்.இணுவில் மத்திய கல்லுாரிக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பிரதேசசபை வருமான வரி பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேசசபையின் அனுமதியை பெறாது குறித்த நடைபாதை வியாபாரம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து நடைபாதை வியாபாரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன்போது... Read more »
யாழ்.குருநகர் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்திருக்கின்றது. சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச தகவல்கள் தொிவிக்கின்றன. மேலும் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தொியவருகின்றது Read more »
அகில இலங்கை சைவமகாசபையால் பசுக்களுக்கு குறி சுண்டல்,நலமடித்தல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலும் வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மாட்டுக்கு குறி சுட்டவர் மீது கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார்... Read more »
யாழ்.வளைவுக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது ,... Read more »
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் புது வருட பிறப்பை முன்னிட்டு படகு போட்டி மற்றும் நீச்சல் போட்டிகளை அக்கராயனகுளம் மீனவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர். அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் இப் படகு போட்டியில் கொட்டும் மழையிலும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். இதனை... Read more »
கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.15 மணியளவில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. தேசிய கொடி ஏற்றப்பட்டு அரச உத்தியுாகத்தர்கள் உறுதி மொழி எடுக்கும் நிகழ்வினை தொடர்ந்து... Read more »