மாடுகளுக்கு குறி சுட்டால் வழக்குத்தாக்கல் சைவ மகாசபை அதிரடி.. வடக்கு மாகாணத்தின் முதலாவது வழக்கு ஊர்காவற்துறையில் தாக்கல்…..!

அகில இலங்கை சைவமகாசபையால் பசுக்களுக்கு குறி சுண்டல்,நலமடித்தல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலும் வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மாட்டுக்கு குறி சுட்டவர் மீது கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார் தெரிவித்தார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த பத்து வருடங்களாக அன்பே சிவம் உயிர்களிடத்தில் அன்பு காட்டுவோம் என்ற தொனிப்பொருளில் பசுவதைக்கு எதிராகவும் எருது மாடுகளுக்கு குறி சுடுவதை நிறுத்துமாறு சைவ மகாசபை பல வழிகளிலும் முயற்சித்து வந்தது.

மாடுகளுக்கு குறிசுடுதல் நலமடித்தல் , பெயர் எழுதுதல், மற்றும் இரும்பு கம்பிகளை சூடாக்கி இலக்கங்களைப் பொறித்தல் ஆகியவற்றிற்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் துண்டுப் பிரசுரங்கள் என பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டும் எதிர் பார்த்த பயன் கிட்ட வில்லை.

இன் நிலையில் கடந்த மாதம் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் குறிசுட்டு பசுவை இரத்த காயத்திற்க்குள்ளாகிய நிலையில் குறித்த மாட்டின் உரிமையாளருக்கு எதிராக சைவ மகாசபையின் பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி பரா நந்தகுமாரால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கின் மூன்றாம் தவணையான நேற்று வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபாய் பிணையில் செல்ல ஊர்காவற்துறை நீதிவான் செல்ல அனுமயளித்து வழக்கு தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.

நமது செயற்பாட்டிற்கு எந்தவித கொடுப்பனவு களையும் வராது சிரேஷ்ட சட்டத்தரணி திருக் குமரனின வழிகாட்டலில் இளம் சட்டத்தரணி சிவஸ்கந்தஸ்ரீ முன்னிலையாகி இருந்தார் அவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்

ஆகவே வடகிழக்கில் வாயில்லா ஜீவன்களான மாடுகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால் அகில இலங்கை சைவமகாசபை வழக்கு இதுபோன்ற வழக்கு தாக்கல் செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews