கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் முறையாக புது வருட பிறப்பை முன்னிட்டு படகு போட்டி!

கிளிநொச்சி அக்கராயன் குளத்தில்  புது வருட பிறப்பை முன்னிட்டு படகு
போட்டி மற்றும் நீச்சல் போட்டிகளை அக்கராயனகுளம் மீனவர் சங்கத்தினர்
ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர்.

அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் இப் படகு போட்டியில் கொட்டும் மழையிலும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து   நீச்சல் போட்டியும் இடம்பெற்றது குளத்தின் நடுப்பகுதியை
அண்மித்த பகுதியில் போட்டி ஆரம்பித்த நீச்சல்  போட்டியானது  குளத்தின்
கரையில் முடிவடைந்தது.

பின்னர் இவ்விரு போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற போட்டியாளர்களுக்கு
பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews