யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்றாவது மலோியா நோயாளி இனங்காணப்பட்டார்! |

யாழ்.போதனா வைத்தியசாலையல் மலோியா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நோயாளிக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மூளை மலேரியாவினை ஏற்படுத்தும் கிருமித் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இந்நபர் தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர். கடந்த ஒரு மாதத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்ட மூன்றாவது மலேரியா நோயாளி இவராவார்.

எனவே யாழ்.மாவட்டத்தில் மலேரியா நோய் நுளம்பின் மூலம் பரவலைத் தடுக்க நுளம்பு பெருகும் இடங்களை இல்லாது ஒழித்தல் மிகவும் அவசியமான கடமையாகும்

Recommended For You

About the Author: Editor Elukainews