தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தபோது மூச்சு திணறல்! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம்.. |

மூச்சு திணறல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது. 

யாழ்.இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரை மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குறித்த குழந்தை, காலை 6 மணியளவில் திடீரென மூச்சடங்கி காணப்பட்டது.

உடனடியாக யாழ்.போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

இறப்பு விசாரணையை யாழ். போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin